சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இந்தியாவின் உள்ள கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவு . இந்த சொந்த வீடு எனும் கனவிற்காக மக்கள் படாத பாடுபடுகின்றனர். வங்கிகளின் லோன் எடுப்பது ,தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது, வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைப்பது என பல வழிகளில் கடன் வாங்குகின்றனர்.
ஒரு சிலர் குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்டாக செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்திற்கு வங்கி கடன் வாங்குவார்கள். ஒரு சிலர் மொத்த பணத்தையும் வங்கியில் கடன் வாங்கித்தான் வீட்டையே வாங்குவார்கள் . இப்படிப்பட்ட சூழலில் வீட்டு வேலை செய்யக்கூடிய ஒரு பெண்மணி 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார், அதற்காக அவர் பத்து லட்சம் ரூபாய் தான் கடனாக வாங்கி இருக்கிறார் மீதி . 50 லட்சம் ரூபாயை அவர் எப்படி செலுத்தினார் என்பதுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான டாபிக்காக ட்ரெண்ட் ஆகி வருகிறது .

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நளினி உன்னாகர் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எப்படி தன் வீட்டில் வேலை செய்யக்கூடிய பெண் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கினார் என்பது குறித்து பதிவு செய்திருக்கிறார் . அதில் என் வீட்டில் வேலை செய்யக்கூடிய பெண் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், நான் கேட்டதற்கு நான் சூரத்தில் 60 லட்சம் மதிப்பிலான மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறேன். இந்த வீட்டுக்காக நான் 10 லட்சம் தான் கடனாக வாங்கினேன் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதை கேட்டவுடனே தான் அதிர்ச்சடைந்ததாக தெரிவித்திருக்கும் நளினி எப்படி இவ்வளவு பணம் உங்களுக்கு கிடைத்தது என கேட்டதற்கு நான் ஏற்கனவே இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறேன் ,சொந்தமாக ஒரு கடை வைத்திருக்கிறேன் இவற்றிலிருந்து எனக்கு நல்ல வாடகை வருமானம் கிடைக்கிறது எனக் கூறினார். இதனை கேட்டு நான் வாய் அடைத்து போய்விட்டேன் என நளினி பதிவு செய்திருக்கிறார்.
வீட்டு பணிப்பெண் ஸ்மார்ட்டான முறையில் பணத்தை சேமித்து தேவையற்ற செலவுகளை குறைத்து செல்வத்தை உருவாக்கி இருப்பதாக நளினி விளக்கம் தந்துள்ளார். பெரிய சம்பளத்தில் வேலைக்கு செல்பவர்கள் நமக்கு வரும் வருமானத்தை ஸ்மார்ட் போன் வாங்குவது, ஆடம்பரமான பொருட்களை வாங்குவது, சுற்றுலா செல்வது, உணவகங்களில் சென்று உணவருந்துவது என செலவு செய்கிறோம் ஆனால் இந்த பெண் சரியான முறையில் திட்டமிட்டு தன்னுடைய பணத்தை சேமித்து வைத்து சரியாக முதலீடு செய்து அந்த முதலீட்டிலும் வருமானம் பார்க்கிறார் என கூறியுள்ளார்.
பணம் சேமிப்பதற்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என பதிலளித்திருக்கிறார் . தற்போது இந்த வீட்டு வேலை செய்யும் பெண்தான் பல நெட்டிசன்களுக்கும் முன் உதாரணமாக மாறி இருக்கிறார் .இந்த நளினி உன்னாகர் தான் இதற்கு முன்பு யூடியூப்பில் சமையல் வீடியோக்களுக்கான சானலை உருவாக்கினார். ஆனால் அதில் எதிர்பார்த்த வரவேற்பும் வருமானமும் இல்லை என கூறி சானலையே மூடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications