ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ. 17,000 கிடைக்கும்! இதை செஞ்சா ஓய்விலும் உல்லாசம்!

சிறிய முதலீடு அதிக வருமானத்தை தராது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். ஏனெனில் சிறுக சிறுக சேமித்தாலும் பிற்காலத்தில் உங்களுக்கே தெரியாமல் அது ஒரு குறிப்பிடத்தக்க வருவாயை வழங்கும். இதை செய்தால் அவசர காலங்கள் ஏற்படும் போது அந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வப்போது முதலீடு செய்யும் பழக்கத்தையும், அதிக தொகை கையில் கிடைக்கும் பொது மொத்தமாக முதலீடு செய்யும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டால் வயதாக வயதாக யாரையும் சார்ந்திருக்காமல் வாழ் நாட்களை கழிக்க முடியும்.

ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒரு சில லட்சங்களை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் தேவைப்படும் செலவை தாமே பார்த்துக் கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்வது அல்லது சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் போன்ற திட்டங்களை பரிசீலிப்பதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய செலவுகளை எளிதில் சமாளிக்கலாம். இது எப்படி சாத்தியம்? என்பதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.

ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ. 17,000 கிடைக்கும்! இதை செஞ்சா ஓய்விலும் உல்லாசம்!

ஒருவர் மாதம் 10,000 ரூபாயை SIP திட்டங்களில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் 20 வருடங்களில் ரூ.24,00,000 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.91,98,574 மொத்த கார்பஸை பெற்றுக் கொள்ளலாம்.

அதுவே 40 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் 10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீடு செய்து வந்தால் 40 ஆண்டுகளில் மொத்தமாக 48,00,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.9,79,30,710 மொத்த கார்பஸை பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய மொத்த ஆண்டுகளில் பாதி ஆண்டுகளுக்குப் பிறகு வருமான அதிகரிப்பு என்பது 10 மடங்கு அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.

மொத்த முதலீடு: அதுவே ரூ. 5 லட்சத்தை ஒருமுறை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 20 ஆண்டுகளில் 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் உங்களுக்கு ரூ.48,23,147 மொத்த கார்பஸாக கிடைக்கும். அதுவே 40 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதலீடு செய்து வைத்திருக்கிறீர்கள் என்றால், 12 சதவீத வருடாந்திர வருமானத்தில் உங்களுடைய கார்பஸ் ரூ.4,65,25,485-ஆக இருக்கும்.

சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் என்றால் என்ன?: சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை திரும்ப பெறுவதற்கான செயல்முறையாகும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிலிருந்து நிலையாக மாத வருமானம் பெற இது உதவும்.

குறிப்பாக ஓய்வூதியம் பெற நினைப்பவர்கள் ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்திருந்தால் SWP மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்த அசல் தொகையிலிருந்து ஒரு பகுதியையும் அந்த முதலீட்டருக்கு கிடைத்த லாபத்திலிருந்து ஒரு பகுதியையும் சேர்த்து திரும்பப் பெறலாம். உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 10,000 ரூபாயை திரும்ப பெறும்போது அந்த பத்தாயிரத்திற்கான உங்கள் அசலில் ஒரு பங்கும் உங்கள் முதலீட்டுக்கு கிடைத்த லாபத்தில் ஒரு பங்கும் சேர்ந்து தான் கிடைக்கும்.

ஒரு லட்சம் முதலீட்டுக்கான கணக்கீடு: ஒருவர் ரூ.1 லட்சத்தை ஒருமுறை முதலீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்ல். இதை 30 வருடங்களுக்கு எடுக்காமல் அப்படியே வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் 30 ஆண்டுகளுக்குப் பின் ரூ.28,95,992 லாபம் கிடைத்திருக்கும். இதனால் அசலும் வட்டியும் சேர்த்து மொத்த கார்பஸாக ரூ.29,95,992 கிடைக்கும்.

எனவே இது போன்ற முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட காலம் மூலதன ஆதாயமாக கருதப்படும். இந்த நிதிக்கு ரூ.1,25,000 வரி விலக்கு அளிக்கப்படும். ரூ.1,25,000 வரி விலக்குக்குப் பிறகு, வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.27,70,992 ஆக இருக்கும். வரியை எல்லாம் கழித்த பின்னர் உங்களிடம் உங்களுடைய சேமிப்பு 26,49,618 ரூபாயாக இருக்கும் ,இதுதான் சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் செயல்முறைக்கான கார்பஸ்.

தற்போது கிடைத்த தொகையை ஹைபிரிட் அல்லது டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 7 சதவீத வருமானம் கிடைத்தால் இதன் மூலம் உங்களுக்கு மாதாந்திர வருமானமாக 17,525 ரூபாய் கிடைக்கும். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இந்த வருமானம் கிடைத்து வந்தால் மொத்தமாக 63,09,000 ரூபாயை எடுத்து இருப்பீர்கள். மீதம் 909 ரூபாய் இருக்கும்.

மேலே கூறப்பட்டுள்ள கணக்கீடு அனைத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை எப்படி அதிகரிப்பது மற்றும் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதற்கான தகவல்கள் மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்ட முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் அதற்கு சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+