பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்ட காலத்திற்கு சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றத் திட்டம். போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் இந்தத் திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள திட்டத்தை தேடிக் கொண்டிருந்தால் அதற்கு PPF கண்டிப்பாக உதவிகரமானதாக இருக்கும். இந்தப் பதிவில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 என்ற வீதத்தில் PPF திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.
இன்றெல்லாம் பலரும் ஹோம் லோன்கள் பெற்று அதற்கு மாதம் மாதம் EMI செலுத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்து அந்த வருமானத்தை வைத்து எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். காலப்போக்கில் உங்களுடைய முதலீடு சீராக வளர்வதற்கு இந்த திட்டம் உதவிகரமானதாக இருக்கும். குறைந்தபட்ச முதலீடாக ஒரு நிதியாண்டுக்கு 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதோடு ரூ.1.5 லட்சம் வரையிலான வரி விளக்கு பலன்களையும் பெறலாம்.
வட்டி விகிதம்: PPF திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டும் அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும். அந்த வகையில் கடந்த 2 காலாண்டுகளாக PPF திட்டத்தின் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
PPF திட்டத்தில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: PPF திட்டத்தில் மாத மாதம் ரூ.12,500 என்ற வீதத்தில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 1.5 லட்சத்தை முதலீடு செய்வீர்கள். அப்படியானால் 15 வருடங்கள் கழித்து ரூ.22.5 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 7.1 சதவீதம் வசூலிக்கப்பட்டால் வட்டி வருமானமாக ரூ.18,18,209 கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 40,68,209 ஆக இருக்கும்.
அதுவே முதிர்வு காலத்தை நீட்டித்து மேலும் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால் உங்களுடைய வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
லோன் வசதி: PPF திட்டத்தில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த பிறகு கடன் பெறலாம். 7-வது நிதியாண்டில் இருந்து PPF வைப்புத் தொகையில் பகுதி அளவு திரும்பப்பெறவும் அனுமதி வழங்கப்படுகிறது. மாதம் மாதம் கணிசமான தொகையை முதலீடு செய்து வருமானத்தை அதிகரிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் ஏற்றது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications