தினமும் ரூ.115 சேமித்தால் போதும்.. ரூ.2.5 லட்சம் கிடைக்கும்! அட்டகாசமான வருமானம் தரும் அரசு திட்டம்!

இன்றளவும் சாமானியர்கள் விருப்பப்பட்ட சேமிக்கும் இடமாக போஸ்ட் ஆபீஸ்கள் திகழ்கிறது. உழைக்கும் வர்க்கத்தினருக்கு என்னவோ அரசு வழங்கும் திட்டங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. இங்கு மொத்தமாக முதலீடு செய்யும் பிக்சட் டெபாசிட் முதல் மாதா மாதம் முதலீடு செய்யும் ரெக்கர்ரிங் டெபாசிட் வரை பல திட்டங்கள் இருக்கிறது. இதில் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து மக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்தப் பதிவில் ரூ. 3500 முதலீடு செய்து ரூ.2,50,000 வருமானம் பெறுவது எப்படி? என்பதை தான் பார்க்கப் போகிறோம்.

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்: அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம் என்று சொல்லப்படுகிற RD திட்டம் மாத சம்பளக்காரர்களுக்கு மிகவும் பொருத்தமான திட்டம் என்றே சொல்லலாம். ஏனெனில் எல்லோராலும் மொத்தமாக பணத்தை வைத்துக் கொண்டு முதலீடு செய்ய முடியாது. மாதம் மாதம் சம்பாதிக்கும் நபர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.

RD திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை, உங்களால் எவ்வளவு முடியுமோ? அந்தத் தொகையை RD கணக்கில் வரவு வைக்கலாம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் வட்டி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதிலிருந்து 3 மாதங்களுக்கு உங்களுக்கு எவ்வளவு வட்டி பொருந்துமோ? அந்த வட்டி அசல் தொகையுடன் வரவு வைக்கப்படும். பின்னர் அடுத்த காலாண்டுக்கு சேர்த்து வைத்த அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கூட்டு வட்டியின் மூலம் வருமானம் பெறலாம்.

தினமும் ரூ.115 சேமித்தால் போதும்.. ரூ.2.5 லட்சம் கிடைக்கும்! அட்டகாசமான வருமானம் தரும் அரசு திட்டம்!

தற்போது போஸ்ட் ஆபீஸ் RD திட்டங்களுக்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.3500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்? என்பதைப் பார்ப்போம். ஒரு முதலீட்டாளர் RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3500 என்ற வீதத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அப்படியானால் தினமும் 115 ரூபாய். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். தொடர்ந்து 60 மாதங்களுக்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து முதலீடு செய்தால் 3500 மாத முதலீடு 2,10,000 ஆக இருக்கும். இதற்கு 6.7 சதவீதம் என்ற கூட்டு வட்டி கிடைத்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி மட்டும் ரூ.39,000 கிடைக்கும். இதன் விளைவாக ஐந்தாண்டு காலம் முடிவில் நீங்கள் செய்த முதலீடு மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து ரூ.2,49,000 பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் 100% பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. கணக்கு தொடங்க பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. ரூ.3500 முதலீடு என்பது ஒரு உதாரத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களால் இயன்ற தொகையை நூறின் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+