இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் தற்போது ஓய்வு காலத்திற்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை சிறுவயதில் இருந்தே சேமிக்க தொடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு இருந்தால் தான் குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் பார்க்க முடியும். ஆனால் குடும்ப சுமை காரணமாக பலரால் ஒரு கணிசமான தொகையை ஓய்வு காலத்திற்காக ஒதுக்க முடிவதில்லை.
அப்படி 40 வயதானவர்கள் இதுவரை தங்களுடைய ஓய்வு காலத்திற்காக எந்த ஒரு நிதியையும் சேமிக்க தொடங்கவில்லை என்றால் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அந்த தொகையை எவ்வாறு சேமிக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாதம் தோறும் 13,000 ரூபாயை நீங்கள் சேமிக்க தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த 13 ,000 ரூபாயில் 10% தொகையை சேர்க்க வேண்டும். அதாவது ஸ்டெப் அப் முறையில் உங்களின் முதலீட்டை ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டும். முதல் ஆண்டு 13,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அடுத்த ஆண்டு உங்களின் முதலீட்டு தொகை 1300 ரூபாயாக 14, 300 ரூபாய் என உயர்ந்திருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் உங்களுடைய முதலீட்டு தொகையை படிப்படியாக உயர்த்தி கொண்டே போக வேண்டும். அவ்வாறு நீங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகள் அதாவது 55 வயதாகும் வரை முதலீட்டை தவறாமல் தொடர வேண்டும். இப்படி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆண்டுதோறும் முதலீட்டை 10% ஸ்டெட் அப் செய்ய வேண்டும், உங்கள் முதலீடு ஆண்டுதோறும் 11% லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
இதனை சரியாக செய்தால் உங்களுக்கு 55 வயது ஆகும்போது உங்களிடம் 1 கோடி ரூபாய் நிதி தொகுப்பு சேர்ந்திருக்கும். பின்னர் அந்த தொகையை உங்களுக்கு மாதம் தோறும் வட்டி வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி உங்களுக்கு மாதந்தோறும் கணிசமான தொகை ஓய்வு கால செலவுக்கான தொகையாக வந்து கொண்டிருக்கும்.
இந்த மாதாந்திர முதலீட்டை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதாவது நிஃப்டி 50 இண்டக்ஸ் ஃபண்டு, மல்டி கேப் ஃபண்டு அல்லது கோல்டு ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது 15 ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததை விடவும் வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஃபண்டுகளை அனுபவம் இல்லாமல் நீங்களே தேர்வு செய்ய கூடாது , நிதி ஆலோசகர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications