நம்மில் பலருக்கும் பாதுகாப்பான முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) தான். ஆனா பல பேர் பண்ற தப்பு என்ன தெரியுமா? கையில் காசு வரும்போது முதலீடு பண்றதுதான். ஆனா PPF-ல ஒரு சின்ன மேஜிக் இருக்கு. நீங்க போடுற அதே பணத்துக்கு, லட்சக்கணக்கில் கூடுதல் லாபம் கிடைக்க ஒரு ரகசிய தேதி இருக்கு.
கஷ்டப்பட்டு உழைக்கிற காசை வெறுமனே பேங்கில் போட்டு வைக்காமல், அது உங்களுக்காக உழைக்கணும்னா, இந்த 2026 ஏப்ரல் மாசத்துல நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அந்த ஒரு கோல்டன் டிப்ஸ் இருக்கு. அதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க. உங்க சேமிப்பில் கூடுதலாக வருமானம் பார்க்கலாம்.

புதிய நிதியாண்டு தொடங்கியாயிற்று. இது உங்கள் முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் பற்றி யோசிக்க வேண்டிய நேரம். குறிப்பாக பலரின் விருப்பமான முதலீட்டு திட்டமான பிபிஎஃப் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இது வெறும் வரி சேமிப்புக்கான திட்டம் மட்டும் அல்ல. சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால், இதிலும் சிறப்பான வருமானம் பார்க்க முடியும்.
பழைய வரி முறையில் இருப்பவர்களுக்கு இதில் நேரடியான வரி சலுகையானது கிடைக்கும். புதிய வரி முறையை தேர்வு செய்தாலும் கூட, இந்த 5ம் தேதி விதியை பின்பற்றினால் பிபிஎஃப் மூலம் வரி இல்லாத வட்டி வருமானத்தால் கூடுதல் பலன் அடையலாம். ஆக உங்கள் அதிகபட்ச லாபத்தை பெற ஒரே ஒரு எளிய வழி ஏப்ரல் 5ம் தேதிக்குள் முதலீடு செய்யுங்கள்.
பிபிஎஃப் திட்டமானது அரசின் பின்புலம் உள்ள ஒரு அஞ்சலக திட்டமாகும். இதில் பழைய வரி முறையில் EEE வரி சலுகை உண்டு. அதாவது நீங்கள் செய்யும் முதலீடு, அதற்கு கிடைக்கும் வட்டி, முதிர்வு தொகை என அனைத்திற்கும் சலுகை உண்டு. தற்போதைய சூழலில் இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% கிடைக்கிறது. இது நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஓய்வு காலத்திற்கு ஏற்ற முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
5ம் தேதி விதியை தெரிந்து கொள்ளுங்கள்?
பிபிஎஃப் விதிகளின் படி, வட்டி கணக்கிடும் போது ஒரு மாதத்தின் 5ம் தேதி முதல் இறுதி வரை உங்கள் கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச தொகையை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் வைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த மாதம் கூடுதலாக ஒரு 5,000 ரூபாய் டெபாசிட் செய்ய நினைக்கிறீர்கள். நீங்கள் அந்த 5,000 ரூபாய் தொகையை ஏப்ரல் 4ம் தேதிக்குள் டெபாசிட் செய்தால், ஏப்ரல் மாதத்திற்கான வட்டி மொத்த தொகையான 1,05,000- ரூபாய்க்கு கணக்கிடப்படும். ஆனால் அதையே ஏப்ரல் 6ம் தேதி, அதாவது 5ம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்தால், வங்கி விதிகளின் படி ஏப்ரல் மாத வட்டி உங்கள் பழைய இருப்பான 1,00,000 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள 5,000 ரூபாய்க்கான வட்டி அந்த மாதம் உங்களுக்கு கிடைக்காது. ஆக நீங்கள் மாத மாதம் முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி, காலாண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்தாலும் சரி, 5ம் தேதிக்கு முன்னதாக முதலீடு செய்தால் வட்டி அந்த மாதத்தில் கிடைக்கும்.
இதே வருடத்திற்கு ஒருமுறை பெரிய தொகையை நீங்கள் முதலீடு செய்பவர் என்றால், ஏப்ரல் மாதம் 5ம் தேதிக்குள் செலுத்துவது அந்த முழு வருடத்திற்கான அதிகபட்ச வட்டியை பெற்று தரும். இந்த 5ம் தேதி விதியை நீங்கள் கவனிக்க தவறினால், கூட்டு வட்டியின் அடிப்படையில் 15 ஆண்டுகால முடிவில் நீங்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை லாபத்தை இழக்க நேரிடலாம். சாதாரணமாக திட்டங்களில் வட்டி கணக்கிடப்படும் முறை என்பது வேறு. பிபிஎஃப் திட்டத்தில் அது வேறு. ஆக ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன்பே முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம்.
உதாரணத்திற்கு நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். ஒரு மாதத்திற்கான வட்டி 7.1/100*1/12*1,50,000= 887.5 ரூபாயாகும். இதே ஆண்டு அடிப்படையில் பார்த்தால் 10,650 ரூபாயாகும். ஒரு வேளை நீங்கள் ஏப்ரல் 5ம் தேதிக்கு பின்னர் முதலீடு செய்தால் 9,762.5 ரூபாய் மட்டுமே. இந்த இழப்பானது வெறும் ஒரு மாதத்தோடு முடிந்துவிடாது. மே மாதத்தில் உங்கள் பிபிஎஃப் கணக்கிற்கு வட்டி விகிதம் கணக்கிடப்படும்போது, ஏப்ரல் மாத வட்டியான 887.5 ரூபாய் சேர்ந்திருக்காது. இதன் மூலம் அடுத்தடுத்த மாதத்தில் அந்த தொகைக்கான வட்டியையும் இழப்பீர்கள். 15 ஆண்டுகால பிபிஎஃப் திட்டத்தில் கூட்டு வட்டியின் சக்தி மிக முக்கியமானது.
தற்போதுள்ள 7.1% வட்டி விகிதத்திலேயே அடுத்த 15 ஆண்டுகளுக்கும் தொடர்வதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5-க்கு முன்னதாக முதலீடு செய்து விட்டால், 15 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி 18.18 லட்சம் ரூபாயாகும். இதில் நீங்கள் ஒரே ஒரு வருடம் மட்டும் 5ம் தேதியை தவறவிட்டால், உங்களுக்கு 17.95 லட்ச ரூபாயாக குறையும். ஒரு முறை தவறவிட்டாலே உங்களுக்கு ஏற்படும் இழப்பு 23,188 ரூபாயாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications
