மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது என்பதும் இதனால் ஆண்டுக்கு ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகமாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் அந்த முதலீட்டை திரும்ப பெறுவது எப்படி? அந்த முதலீட்டை பெறுவதற்கான கட்டணம் ஏதும் உண்டா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த தகவல்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொருத்தவரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு வழிகளில் மூலம் திரும்ப பெறலாம். ஆஃப்லைன் மூலம் முதலீட்டை திரும்ப பெறுவதற்கு கோரிக்கை படிவம் ஒன்றை கையெழுத்திட்டு ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம்
இந்த படிவத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களின் பெயர், போர்ட்போலியோ எண், என்ஏவி யூனிட் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட பின் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முதலீடு செய்யப்பட்டவரின் வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன்
ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று மியூச்சுவல் ஃபண்ட் ரீடீம் என்ற ஆப்ஷன் சென்று முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் மொத்தமாகவும் அல்லது பகுதியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
CAMS
மேலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை திரும்ப பெற CAMS (கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்), போன்ற பதிவாளர் நிறுவனங்களும் உதவி செய்யும். ஆன்லைனில் படிவத்தை பதிவிறக்க செய்தோ அல்லது அருகாமையிலுள்ள CAMS அலுவலகத்திற்கு சென்றோ முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் இந்த ஏஜென்சிகள் எல்லா AMCகளுக்கும் சேவையளிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பெறுவதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தி செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றால் வெளியேற்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 80சி கீழ்வரும் நலங்களை வழங்கிடும் திட்டங்கள் தவிர வேறு எந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்தாலும் கட்டணமின்றி தங்களது முதலீட்டை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications