திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் அல்லது அவசர பணத் தேவைகளுக்கு யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்கிறீர்களா? கந்துவட்டி அல்லது அதிக வட்டி வசூலிக்கும் தனிநபர் கடன்களை (Personal Loans) தேடி ஓடுவதற்கு முன்னால், உங்கள் பிபிஎஃப் (PPF) கணக்கை ஒருமுறை செக் செய்யுங்கள்.
உங்களுடைய நீண்ட கால சேமிப்பான பிபிஎஃப் கணக்கு, வெறும் ஓய்வு காலத்திற்கு மட்டும் அல்ல. உங்கள் இக்கட்டான காலத்திலும் கைகொடுக்கும் ஒரு ஏடிஎம் போல செயல்படும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. வங்கிக் கடன்களை விட மிகக் குறைந்த வட்டியில், பிணையம் ஏதுமின்றி உங்கள் சேமிப்பில் இருந்து கடன் பெறும் வசதி இதில் உள்ளது. ஆனால் அதற்கு சில முக்கியமான காலக்கெடு மற்றும் விதிமுறைகள் உள்ளன.

உங்களுடைய பிபிஎஃப் கணக்கை தொடங்கி 3-வது நிதியாண்டு முதல் 6-வது நிதியாண்டு வரை மட்டுமே நீங்கள் கடன் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிபிஎஃப் சேமிப்பை கொண்டு எப்படி ஸ்மார்ட்டாக கடன் பெறுவது, அதன் வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பி செலுத்தும் முறைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது முதலீட்டாளர்கள் பட்டியலில் இருக்கும் விருப்பமான திட்டங்களில் ஒன்றாகும். இதில் வழங்கப்படும் வட்டி 7.1% தான் என்றாலும். நிலையான வருமானம் தரும் EEE வரிச் சலுகை பலரையும் ஈர்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாகவும் உள்ளது. அதில் அவசர தேவைக்கு கடனும் வாங்கிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு தானே.
ரிஸ்கே இல்லாமல் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் உகந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. பிபிஎஃப் திட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து கணக்குதாரர்களுக்கும் கடன் வசதி உண்டு. ஆனால் கணக்கு தொடங்கி 3ம் ஆண்டு முதல் 6வது ஆண்டு வரை மட்டுமே கடன் பெற முடியும். அதாவது உங்களுடைய பிபிஎஃப் கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை எடுக்கும் தகுதி வருவதற்கு முன்னரே, இந்த கடன் வசதியை பயன்படுத்தி கடன் பெறலாம்.
நீங்கள் உங்கள் கணக்கிற்கு எதிரான பணம் பெற விரும்பினால் உங்களுடைய கணக்கு இருக்கும் வங்கி கிளை அல்லது அஞ்சலகத்தில் சென்று படிவம் டி-ஐ சமர்பிக்க வேண்டும். அதில் உங்களுடைய பிபிஎஃப் கணக்கு எண், உங்களுக்கு தேவையான கடன் தொகை, பிபிஎஃப் பாஸ்புக் நகல் உள்ளிட்டவற்றை சேர்த்து கொடுக்க வேண்டியிருக்கும். 6வது ஆண்டிற்குள் நீங்கள் ஒரு முறை கடன் வாங்கி செலுத்தி விட்டால் இரண்டாவது முறையும் பெற்று கொள்ளலாம்.
உங்களுக்கான கடன் தொகையானது, நீங்கள் கடன் கோரும் ஆண்டில் இருந்து, இரண்டாவது நிதி ஆண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் இருந்த இருப்பில் அதிகபட்சம் 25% வரை மட்டுமே கடன் பெற முடியும். கடனை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தினால், வட்டி விகிதம் ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. கடனை திருப்பி செலுத்த 36 மாதங்களுக்கு மேல் ஆனால், கடன் வாங்கிய தேதியிலிருந்து 6% வட்டி வசூலிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் காலம் வரை, உங்கள் பிபிஎஃப் சேமிப்பிற்கு எந்த வட்டியும் கிடைக்காது.
இதில் வாங்கிய கடனுக்காக முதலில் அசலை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். அசலை செலுத்தி முடித்த பின்னர் வட்டி தொகையை இரண்டு அல்லது குறைவான தவணைகளில் செலுத்தலாம். ஒருவேளை நீங்கள் வட்டி செலுத்த தவறினால், அது நேரடியான உங்களுடைய பிபிஎஃப் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications

