எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு சென்றால் தான் வருமானம் என்ற காலம் மெல்ல மாறி வருகிறது. நாம் தூங்கும் போது கூட நம்முடைய பணம் நமக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய ஸ்மார்ட் முதலீட்டாளர்களின் தாரக மந்திரம். அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஒரு அசத்தலான வாய்ப்பை வழங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் சரியாக உங்கள் வங்கி கணக்கிற்கு 11,000 ரூபாய் வந்து சேர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? பங்குச் சந்தை அபாயங்கள் ஏதுமில்லாமல், பாதுகாப்பான முறையில் ஒரு நிரந்தர வருமானத்தை உருவாக்க எஸ்பிஐ-யின் அன்னுயிட்டி டெபாசிட் (Annuity Deposit Scheme) திட்டம் கைகொடுக்கிறது.

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

அதில் ஒருவர் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், அடுத்த பல ஆண்டுகளுக்கு உங்கள் பாக்கெட்டில் மாதம் தோறும் பணம் வந்து விழும். இந்த மேஜிக் எப்படி நடக்கிறது? நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? வட்டி விகிதங்கள் என்ன? மற்ற முக்கிய விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

உங்கள் வேலை உடன் கூடவே ஒரு கூடுதல் வருமானத்தை உருவாக்க நீங்கள் விரும்பினால், எஸ்பிஐ-யின் அன்னுயிட்டி டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இது ஆண்டு டெபாசிட் திட்டம் என்றும் கூறப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்வதன் மூலம், வட்டியுடன் சேர்த்து ஒரு கணிசமான தொகையை மாதந்தோறும் தவணையாக பெற முடியும்.

இந்த திட்டம் எவ்வித சந்தை அபாயங்களும் இல்லாத, பாதுகாப்பான மற்றும் உறுதியான லாபத்தை வழங்கும் ஒரு திட்டமாகும். ஒரு முறை மட்டும் முதலீடு செய்துவிட்டு, ஒவ்வொரு மாதமும் வங்கியிடமிருந்து வருமானத்தைப் பெற்று கொள்ளலாம். ஆக ஓய்வூதியதாரர்களுக்கும், இரண்டாவது வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த திட்டம் ஏற்றது.

இந்த திட்டத்தின் தனிச்சிறப்பே உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் பெறும் மாதாந்திரத் தவணையில் உங்கள் அசல் தொகையின் ஒரு பகுதியும், அதற்கான வட்டியும் கலந்திருக்கும். இதனால் இது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாகக் கருதப்படுகிறது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு எந்த வரம்பும் இல்லை. இந்த முதலீட்டுக்கான கால அளவு 3, 5, 7 அல்லது 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் வட்டி விகிதங்கள் சாதாரண பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இணையானது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறும். இதில் மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் செய்யும் டெபாசிட் தொகையில் 75% வரை கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.

உதாரணத்திற்கு நீங்கள் 10 லட்சம் ரூபாயை 10 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 11,354 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த 10 ஆண்டு கால முடிவில், நீங்கள் மொத்தமாக 13.62 லட்சம் தொகையை பெற்றிருப்பீர்கள்.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இது தனிப்பட்ட ஒருவர் பெயரிலோ அல்லது இணைந்தும் கூட தொடங்கி கொள்ளும் வாய்ப்பு உண்டு. முதலீடு செய்யும் நபர் ஒருவேளை துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் கூட, அந்த தொகையை முன்கூட்டியே பெற எந்த வித வரம்பும் இல்லை. குடும்பத்தினருக்கு டெபாசிட் செய்யப்பட்ட முழு தொகையும் கிடைக்கும். அது மோசமான அந்த சூழலில் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் நிதி ரீதியாக ஆவது ஆறுதலாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+