மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யும் முதலீடுகள் கணிசமான லாபத்தை தருகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு விதமான முதலீடுகள் செய்யப்படுகின்றன. ஒன்று லம்ப்சம் எனப்படும் ஒரே முறை செய்யும் முதலீடு, மற்றொன்று மாதந்தோறும் செலுத்தும் எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்.
மாதந்தோறும் செலுத்தக்கூடிய எஸ்ஐபி முறை நல்ல லாபத்தை தருபவை என்பதால் மக்களின் விருப்பமாக மாறியுள்ளது. குறிப்பாக காம்பவுண்டிங் முறையில் உங்களின் முதலீடானது வளர்ச்சி அடையும். கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபி முதலீடுகள் சராசரியாக 12% லாபம் தந்துள்ளன.

எனவே ஒரு நாளைக்கு ரூ.200 என்ற வீதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
15 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.200 முதலீடு: உதாரணமாக 25 வயதாகும் ஒரு நபர் , ஒரு நாளைக்கு 200 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 12% லாபம் கிடைக்கிறது என்றால், 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு ரூ. 10,80,000. இதற்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் ரூ.19.50 லட்சம், எனவே மொத்த முதிர்வு தொகை ரூ.30.3 லட்சம் என கிடைக்கும்.
20 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.200 முதலீடு: உதாரணமாக 25 வயதாகும் ஒரு நபர் , ஒரு நாளைக்கு 200 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 12% லாபம் கிடைக்கிறது என்றால், 20 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு ரூ. 14.4 லட்சம். இதற்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் ரூ. 45.5 லட்சம், எனவே மொத்த முதிர்வு தொகை ரூ. 59.9 லட்சம் என கிடைக்கும்.
25 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.200 முதலீடு: உதாரணமாக 25 வயதாகும் ஒரு நபர், ஒரு நாளைக்கு 200 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 12% லாபம் கிடைக்கிறது என்றால், 25 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு ரூ. 18 லட்சம். இதற்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் ரூ. 95.85 லட்சம், எனவே மொத்த முதிர்வு தொகை ரூ. 1.1 கோடி என கிடைக்கும்.
எனவே 25 வயதாகும் ஒரு நபர் 25 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நாள்தோறும் ரூ.200 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் 50 வயதாகும் போது அவருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை ரூ.1 கோடி.
Story Written by: devika


Click it and Unblock the Notifications