சென்னை: மாதம் 1 லட்சம் ரூபாய் ஊதியமாக பெரும் ஒரு நபர் முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் எளிதாக ஒரு கோடி ரூபாய் என்ற சேமிப்பு இலக்கை எட்ட முடியும். இந்த நபர் எவ்வளவு எளிதாக ஒரு கோடி ரூபாயை சேமிக்க முடியும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களின் முதலீடு கணிசமான தொகையாக வளர்ந்திருக்கும் என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள். நீண்ட கால நோக்கில் செல்வத்தை பெருக்குவதற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.

வழக்கமான முதலீடுகளை விட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால அடிப்படையில் கணிசமான அளவு லாபத்தை தரும் என சொல்லப்படுகிறது.
உதாரணமாக நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் கணிசமான லாபத்தை தந்துள்ளன.
தற்போது 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெரும் ஒரு நபர் தன்னுடைய ஊதியத்தில் 15 முதல் 20% முதலீடுகளுக்கு என ஒதுக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கோடி ரூபாயை எளிதாக சேர்த்து விட முடியும்.
1 லட்சம் ரூபாய் ஊதியம் பெரும் ஒரு நபர் மாதந்தோறும் 15,000 ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்.
அது ஆண்டுதோறும் 12 சதவீதம் லாபம் தருகிறது என வைத்துக் கொண்டால் இந்த நபர் 211 மாதங்களில் ஒரு கோடி ரூபாயை சேமித்து விட முடியும்.அதே போல மாதத்திற்கு 20,000 ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் 185 மாதங்களில் ஒரு கோடி ரூபாயை எட்டி விட முடியும். தன்யை ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் 166 மாதங்களில் அவர் கோடீஸ்வரர் ஆகிவிட முடியும்.
இதுவே அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய எஸ் ஐ பி முதலீட்டினை 5% என உயர்த்தினால் மாதம் 15 ,000 ரூபாய் முதலீடு செய்பவர் ஆண்டுக்கு அதனை 5% என உயர்த்தி வந்தால் 186 மாதங்களிலேயே ஒரு கோடி ரூபாயை எட்டி விட முடியும். இதே நடைமுறையில் 20,000 முதலீடு செய்பவர் 164 மாதங்களில் 1 கோடி ரூபாயை பெற முடியும்.


Click it and Unblock the Notifications