பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் அதே பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் அது வானத்தை எட்டும் அளவிற்கு வளரும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சிறந்த உதாரணம். பொதுவாக ஒரு சொகுசு வீடு வாங்க வேண்டும் என்றால், வாழ்நாள் சேமிப்பை மொத்தமாக கொட்டியோ அல்லது பல ஆண்டுகள் EMI சுமையில் சிக்கியோதான் நாம் பழகியிருக்கிறோம்.
ஆனால், இங்கோ ஒரு முதலீட்டாளர் 8 கோடி ரூபாய் முதலீட்டை ஒரு விதையாக பயன்படுத்தி, 10 ரூபாய் கோடி மதிப்பிலான வீட்டையும் சொந்தமாக்கி, இறுதியில் கையில் 10.5 கோடி லாபத்துடனும் கம்பீரமாக நிற்கிறார். EMI பாரத்தை முதலீடே சுமக்க செய்த அந்த சாதுர்யமான நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Funds) மூலம் அவர் நிகழ்த்திய இந்த நிதி புரட்சியை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக நம்மில் பலருக்கும் சொந்த வீடு கனவு என்றாலே பணம் தான் மிகப்பெரிய பிரச்சனையே. சொல்லப்போனால் பலரும் வீட்டுக் கடன் வாங்கித் தான் அந்த கனவு வீட்டை மெய்ப்பட வைக்கிறோம். ஆசை ஆசையாய் கடன் வாங்கி வீடு கட்டும் போது, ஆரம்பத்தில் மகிழ்ச்சியில் எதுவும் தெரிவதில்லை. ஆனால் மாத மாதம் தவணை தொகை செலுத்தும் போது, இது எப்போது தான் முடியும் என்ற சலிப்பு உண்டாகிறது. சொல்லப்போனால் இந்த ஒற்றை கனவை நிறைவேற்ற பலரும், தங்களுடைய பல விருப்பமான கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
பலரும் வீடோ அல்லது ஏதேனும் ஒரு சொத்து வாங்கும் போது, அதற்கு கடன் வாங்காமல், கையில் இருந்து கொடுத்து வாங்குவது தான் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் அது மிக தவறானது. ஒரு முதலீட்டாளர் பணத்தையும் செலவழிக்காமல், அந்த அந்த பணத்தை கொண்டு எப்படி ஒரு வீட்டையும் வாங்கி, தனது செல்வத்தையும் பெருக்க முடியும் என பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால் அது உண்மை தான்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தி டிரெண்டிங் வோல்ஃப் என்ற பெயரில் பகிரப்பட்ட பதிவு தான் இது. ஒருவரிடம் 10 கோடி ரூபாய் பணமானது இருந்துள்ளது. அவர் ஒரு வீட்டை வாங்க நினைக்கிறார். ஆனால் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒரு வீட்டை கடன் இல்லாமல் வாங்குவதற்கு பதிலாக, கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்திருக்கிறார். அதாவது தனது கைவசம் இருக்கும் 10 கோடி ரூபாயில் 8 கோடி ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார். மீதமிருக்கும் 2 கோடி ரூபாயை டவுன் பேமெண்டாக செய்கிறார். மியூச்சுவல் ஃபண்டில் அவருக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டு கொள்வோம். தனது வீட்டிற்காக 8 கோடி ரூபாய் வீட்டுக் கடன் எடுக்கிறார். அதற்கு வட்டி விகிதம் 8.5% ஆகும். மாத தவணை சுமார் 7 லட்சம் ரூபாயாகும். இதை அவருடைய சம்பளத்தில் இருந்தோ அல்லது சேமிப்பில் இருந்தோ கட்டவில்லை.
மாறாக தான் முதலீடு செய்திருந்த 8 கோடி ரூபாயில் இருந்து எஸ்டபள்யூபி (SWP) மூலம் 7 லட்சம் ரூபாயை பெறத் தொடங்குகிறார். 20 வருடம் கழித்து பார்க்கும் போது அவரின் கையில் 10.5 கோடி ரூபாய் நிதியும் உள்ளது. மாத மாதம் தவணையும் எஸ் டபிள்யூ பி மூலம் சென்று விடுகிறது. இதன் மூலம் வீட்டுக்கு வீடும் சொந்தமாகி விட்டது.
வயதான காலகட்டத்தில் ஒரு பெரிய கார்ப்பஸ் தொகையும் உள்ளது. மொத்தத்தில் கையில் இருந்த காசையும் இழக்காமல். வீட்டையும் வாங்கியாகிவிட்டது. கையில் இருந்த காசும் முன்பை விட சற்று கூடுதலாக வந்துவிட்டது.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்றுதான். சொத்துக்களை நேரடியாக வாங்காதீர்கள். உங்கள் சொத்துக்கள் ஈட்டித் தரும் வருமானத்தைக் கொண்டு மற்ற சொத்துக்களை வாங்குங்கள். Don't just buy assets. Let your assets pay for your assets. ஆக சரியான நிதி திட்டமிடல் இருந்தால், உங்கள் பணம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications

