இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட அதிக லாபம் கொடுக்கும் முதலீட்டு திட்டம் உண்டா? அப்படியிருந்தால் கூறுங்கள் என குட் ரிட்டர்ஸ் ரீடர்ஸ் அடிக்கடி கமாண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வங்கி வட்டியை விட அதிக லாபம் கொடுக்கும் முதலீட்டு திட்டமான, இந்தியன் ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பத்திர (IRFC bonds) முதலீட்டினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க விருக்கிறோம்.
இதன் மூலம் திரட்டப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகள், ரயில்வே உள்கட்டமைப்பு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
IRFC நிதி திரட்டல்
இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், இந்திய ரயில்வே நிறுவனத்திற்காக சொத்துக்களை வாங்கி தரும் ஒரு நிறுவனமாகும். அதாவது ரயில்வே துறைக்கு தேவையான நிதியினை, இந்த ஐ.ஆர்.எஃப்.சி நிதி நிறுவனம் கொடுக்கிறது. இந்த நிறுவனம் பத்திரம் உள்ளிட்ட பல வகையானது அம்சம் மூலம் நிதியினை திரட்டி கொடுக்கின்றது.
பத்திரம் வெளியீடு
இதற்கு பதிலாக இந்தியன் ரயில்வே IRFC-யின் சொத்துக்களுக்காக வாடகையோ அல்லது லீஸ் மூலமாகவோ, ஒரு தொகையினை கொடுக்கின்றது. ஆக இதன் மூலம் தான் IRFC வருமானம் ஈட்டி, முதலீட்டாளர்களுக்கு வட்டியை கொடுக்கின்றது.
இவ்வாறு நிதியினை திரட்ட IRFC நிதி நிறுவனம் பத்திரங்களை வெளியிடுகின்றது. இந்த பத்திரங்களுக்கு தற்போதைய நிலையில் 5% வட்டி கொடுக்கப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு
இந்த பத்திரங்கள் இந்திய ரயில்வே மூலம் வெளியிடப்படுவதால் மிக பாதுகாப்பான முதலீடாகவும், நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகின்றது. இது குறிப்பாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இது சந்தை அபாயம் இல்லாத ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதனால் நீண்டகால முதலீட்டாளர்கள் மத்தியிலும், இந்த முதலீட்டு திட்டம் நல்ல வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ரேட்டிங்க்ஸ் மதிப்பீடு
இந்த பத்திரங்கள் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி, அதன் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக உள்ளது.
இந்த பத்திரங்களுக்கு கிரிசில், இக்ரா, கேர் ரேட்டிங்க்ஸ் நிறுவனங்கள் AAA ரேட்டிங்கினை வழங்கியுள்ளன.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த பத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி வட்டி கொடுக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது.
இந்த பத்திரங்களுக்கு TDS பிடித்தம் இல்லை. எனினும் இந்த பத்திரங்களுக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும். அதே போல 54EC பிரிவின் கீழும் வரிச்சலுகை கிடைக்கும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்
இந்த பத்திரங்களில் குறைந்தபட்சம் ஒரு நிதியாண்டில் 2 பத்திரங்களுக்கு 20,000 ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். முதலீட்டாளர்களிடம் டிமேட் கனக்கு இல்லை எனில், முதலீட்டாளர்கள் நிலையான வைப்பு தொகை போன்ற பத்திர சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் முதிர்வுக்கு பிறகு திரும்ப அளிக்கப்படும். இந்த பத்திரங்களின் லாக் இன் காலம் 5 ஆண்டுகளாகும்.
எப்படி பத்திரங்களை வாங்குவது?
இதற்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், IRFC Capital Gain Bonds என்ற பெயரில் காசோலையை பூர்த்தி செய்து, பான் கார்டு ஜெராக்ஸ், முகவரி சான்று, ரத்து செய்யப்பட்ட காசோலை உள்ளிட்டவற்றை சேர்த்து கொரியர் அனுப்ப வேண்டியிருக்கும். இதனை டீமேட் மூலமாகவும் வாங்கிக் கொள்ள முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு



Click it and Unblock the Notifications