ஓய்வுகாலத்தினை நல்ல முறையில் கழிக்க என்ன செய்யலாம்.. எப்போது.. எவ்வளவு முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலரும் ஓய்வுக் காலத்திற்கான முதலீடு என்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஏன் முதலீடு செய்ய வேண்டிய காலத்தில் அதனை பற்றி நினைக்காமல், வயது முதிர்ந்த காலத்தில் அதனை நினைத்து கவலைப்படுவதுண்டு.

இன்னும் சொல்லப்போனால் 58 வயதில் தான் ஓய்வூதிய திட்டம் என்பதனையே நினைப்பார்கள்.

ஓய்வுகாலத்தினை நல்ல முறையில் கழிக்க என்ன செய்யலாம்.. எப்போது.. எவ்வளவு முதலீடு செய்யலாம்..!

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி கடைசி நேரத்தில், அய்யோ போச்சேன்னு அடிச்சிக்கிறது தான் நம்மவர்களின் பழக்கம். ஓர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செய்த ஆய்வில் இந்தியாவில் 80% பேர் பேருக்கு ஓய்வு காலத்திற்கான எந்தவொரு திட்டமும் இருப்பதில்லையாம்.

இதில் 71% ஆவது ஏதோ கொஞ்சம் கவலைபடுறாங்கலாம். ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அதுவும் 55 வயதிற்கு மேல் தான் அந்த கவலையும் வருகிறதாம். சரி சரி அத விடுங்க பாஸ்..

நாம் நமக்கான முதலீட்டினை எந்த வயசில் ஆரம்பிக்கணும்? பொதுவாக இந்த திட்டத்தினை ஆரம்பத்தில் நீங்க வேலைக்கு சேர்ந்த பின்னர் ஆரம்பிக்கலாம். அதாவது கல்லூரி படிப்பினை முடித்த பிறகு, ஆரம்ப காலத்திலேயே திட்டமிடும் போது குறைந்த அளவிலான தொகையினை ஒதுக்கினால் போதுமானதாக இருக்கும்.

அதோடு அது நாளுக்கு நாள், வருடத்துக்கு வருடம் ஏறிக் கொண்டே போகும். ஆக உங்களது ஓய்வுக்காலத்தில் அது கணிசமான தொகையாக அதிகரிக்கும். இதே நீங்கள் ஆரம்ப கட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், பின்னர் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டி இருக்கலாம். அதெல்லாம் சரி, எதில் எப்போது முதலீடு செய்யலாம்.

நீங்க ஆரம்ப காலத்தில் உங்களது முதலீட்டினை தொடங்கினால் குறைந்த அளவு எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம். ஓய்வுக்காலத்தில் நமக்கு என்ன பொறுப்புகள் இருக்கு, எவ்வளவு நிதி நமக்கு அப்போது தேவைப்படும். என எல்லாவற்றையும் யோசித்து முதலீடு செய்வது நல்லது.

பொதுவாக பேங்க் டெபாசிட்கள், போஸ்ட் ஆபீஸ் மூலம் பணம் சேமிக்கலாம், மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி முதலீடு என மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து கூட சேமிக்க தொடங்கலாம். அதிலும் இதில் நீண்டகால சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது மிக நல்லது.

இன்னும் சில போது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட், வங்கி பிக்ஸ்ட் டெபாசிட் என பல திட்டங்கள் உள்ளன. ஆக இவற்றில் ஏதேனும் ஒன்றினை சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்யலாம்.

சரி இதற்கு எவ்வளவு வட்டி, எப்படி முதலீடு செய்வது, எது சிறந்த முதலீடு நாளை தெரிந்து கொள்வோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How do I start investing for retirement?

if you're just beginning to put money away for retirement, start saving and investing as much as you can now.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X