இந்தியாவில் வேளாண்மை மூலம் வரும் எந்த ஒரு வருமானமும் வரி விலக்குக்கு உட்பட்டது. அதாவது விவசாயம் மூலம் நமக்கு கிடைக்கும் வருமானத்திற்கு நாம் வருமான வரி செலுத்த வேண்டியது கிடையாது. அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி. இந்த ஒரு விதிமுறையை பயன்படுத்திக் கொண்டு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தற்போது விவசாய நிலங்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்வெஸ்ட்மென்ட் பேங்க்கரான அஹூஜா தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய செல்வந்தர்கள் ஏன் திடீரென விவசாய நிலங்களை வாங்கி குவிக்கிறார்கள் தெரியுமா என்ற கேள்வியுடன் தன்னுடைய பதிவை தொடங்கி இருக்கிறார். நீங்கள் எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா பெரும் பணக்காரருக்கு விவசாய நிலம் வாங்குவதில் மற்றும் பண்ணைகளை வாங்குவதில் ஏன் ஆர்வம் பிறந்திருக்கிறது? இயற்கை வேளாண்மையில் இருக்கும் ஆர்வம் என நீங்கள் நினைத்தால் அது தவறு என கூறுகிறார்.

கோடிக்கணக்கிலான வரியை சேமிப்பதற்காக தான் அவர்கள் விவசாய நிலங்களை வாங்குகிறார்கள் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே செல்வந்தர்கள் விவசாய நிலங்களில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது ,பெங்களூருவில் இருக்கும் ஒரு நபர் குன்னூரில் ஏன் நிலம் வாங்குகிறார் மும்பையில் இருக்கும் நபர் ஏன் அலிபாக் பகுதியில் நிலம் வாங்குகிறார் என கேள்வி எழுப்பியிருக்கும் அவர் இந்திய வருமான வரி சட்டங்களை இதற்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் வேளாண்மை மூலம் வரக்கூடிய வருமானத்திற்கு எந்த ஒரு வரியையும் நாம் செலுத்த வேண்டியது இல்லை. எனவே ஒரு தொழிலதிபர் வருமான வரியில் காட்ட முடியாத அளவிற்கு பணத்தை தன்னிடம் வைத்திருக்கிறார் என்றால் அதனை தன்னுடைய நிலத்தில் விவசாயம் மூலம் தனது கிடைத்த வருமானம் எனக் கூறி வரி செலுத்துவதில் இருந்து தப்பி விடுகிறார் என தெரிவித்துள்ளார் .
என்னுடைய நிலத்தில் விளைந்த காய்கறியை விற்பனை செய்தேன் அல்லது பண்ணையிலிருந்து பால் விற்பனை செய்தேன் என்பன உள்ளிட்டவற்றை காரணமாக கூறி தங்களிடம் கூடுதலாக இருக்கும் தொகைக்கு வரி செலுத்தாமல் தப்பி விடுகிறார்கள். இவ்வாறு விவசாயத்தில் இருந்து கிடைத்த வருமானம் என கூறி கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள்.
பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை தங்கள் பெயரில் வாங்கி வைப்பதன் மூலம் வருமான வரியில் இருந்தும் தப்பிக்கிறார்கள் ஜிஎஸ்டி-யையும் சேமிக்கிறார்கள் என கூறுகிறார். இந்தியாவை சேர்ந்த மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஒரு இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்குவதற்காகவே தங்கள் வாழ்நாள் வருமானத்தையே செலவிடுகிறார்கள், ஆனால் செல்வந்தர்கள் வேளாண் நிலத்தை வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கிலான வரியை செலுத்தாமல் தப்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications