ரூ.10,000 முதலீட்டை 6 ஆண்டுகளில் ரூ.1.3 கோடியாக மாற்றிய இளைஞர்..!! இது தான் அவரின் முதலீட்டு ரகசியம்..!!

)இந்தியாவில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு சாதாரண நபர் தனது முதலீட்டு பயணத்தின் மூலம் 6 ஆண்டுகளில் எப்படி பணத்தை பெருக்கினேன் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

வெறும் 10,000 ரூபாயில் தொடங்கிய முதலீட்டு பயணம் 6 ஆண்டுகளில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய போர்ட்ஃபோலியோவாக மாறி இருக்கிறது என கரன் வாலியா என்ற இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக வீடியோ வெளியிட்டுள்ளார். அது தான் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக உள்ளது.

ரூ.10,000 முதலீட்டை 6 ஆண்டுகளில் ரூ.1.3 கோடியாக மாற்றிய இளைஞர்..!! இது தான் அவரின் முதலீட்டு ரகசியம்

பெரிய அளவிலான பின்னணி அல்லது குடும்ப சொத்துகள் ஏதுமின்றி, மிக சிறிய தொகையில் தனது முதலீட்டுப் பயணத்தை தொடங்கிய இவர், முறையான திட்டமிடல் மற்றும் தொடர் முதலீட்டின் மூலமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கிறார். 20 வயதில் தன்னுடைய முதலீட்டு பயணம் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் தான் தன்னை முதலீட்டை நோக்கி அழைத்து சென்றதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். நாம் பணம் சம்பாதித்து வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்தால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. பொருட்களின் விலை ஏறி கொண்டே போகிறது நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே பணவீக்கத்தில் இருந்து தப்பிக்க நம் பணம் பணத்தை சம்பாதித்து தர வேண்டும் என்ற முடிவை எடுத்தாராம்.

Also Read

அப்படி முதலில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய முயன்ற போது தான் பணவீக்கம் 8% ஆக உள்ளது ஆனால் ஃபிக்சட் டெபாசிட்டில் இதனை விட குறைவான வருமானமே இருக்கிறது என்பதால் தான் பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் பக்கம் சென்றதாக தெரிவித்துள்ளார். படிப்படியாக முதலீட்டை கற்று கொண்டு அதன் மூலமே போர்ட்போலியோவை பெருக்கியதாக தெரிவித்துள்ளார்.

சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தனது முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்வது, குறுகிய கால லாபத்தை எதிர்பாராமல் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை தொடர்வது தான் பங்குச்சந்தை முதலீடுகளில் லாபத்தை பெற்று தரும் என தெரிவிக்கிறார்.

Recommended For You

பொதுவாகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை திரும்ப பெறாமல் அப்படியே தொடர்ந்து வளர செய்ததன் மூலம், கூட்டு வட்டியின் முழுமையான பலனை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் தான் சிறு வயதிலேயே முதலீட்டை தொடங்க வேண்டும் குறிப்பிட்ட காலம் அது வளர நேரம் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.அவசரகால தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப வருமானத்தில் ஒரு பகுதியை திட்டமிட்டு முதலீட்டிற்காக ஒதுக்க வேண்டும் அதனை ஒழுக்கமாக தொடர வேண்டும் என்பதே இந்த இளைஞர் கூறும் ரகசியம்.

இந்த இளைஞரின் வீடியோ நிதி சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் பலருக்கு ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் பணம் இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றில்லாமல் குறைந்த தொகையில் தொடங்கி பெரிய அளவிலான செல்வத்தை உருவாக்க முடியும் என்பதையே இவரது வீடியோ உணர்த்துகிறது. இது தான் அந்த வீடியோவுக்கான இன்ஸ்டாகிராம் லிங்க் (https://www.instagram.com/reel/DbYHeTGu1FM/?igsh=b2NubnBoMWpiMHJj).

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+