ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது EPFO அமைப்பால் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டமாகும். EPFO திட்டத்தின் கீழ், ஒரு நபர் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வரை அவருடைய முதலாளி மற்றும் பணிபுரியும் ஊழியர் இருவரும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் ஊழியர் தனது EPF பங்களிப்புக்கு வரிச் சலுகைகளையும் மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தையும் பெறலாம். EPF திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவது எப்படி? என்பதை விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
தற்போது, EPF திட்டத்திற்கு 8.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. EPFO விதிகளின்படி, தொழிலாளி தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12% தொகையை EPF-இல் செலுத்த வேண்டும். தொழிலாளியின் பங்கை சமன்ப்படுத்த முதலாளியும் 12% தொகையை செலுத்த வேண்டும். இதில் 8.33% EPS-க்கும், 3.67% EPF-க்கும் செலுத்தப்படும்.

கூடுதலாக, தொழிலாளர்களுக்கு விருப்பத்திற்கேற்ப கூடுதல் பங்களிப்பு செய்யும் வசதியும் உள்ளது. இதில், அவர்களின் 12% பங்களிப்பைத் தாண்டி கூடுதலாக பங்களிக்கலாம். அதிகபட்ச VPF பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்தத் தொகையாகவும் இருக்கலாம். இதற்கான வட்டி விகிதமும் அதே 8.25 சதவீதம் தான்.
ஒரு நிதியாண்டில் உங்களின் தன்னார்வ EPF பங்களிப்புகள் ரூ. 2.5 லட்சத்தை தாண்டியிருந்தால், அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
ரூ.25,000 சம்பளத்தில் 1 கோடி ரூபாய் ஓய்வுக்காக சேமிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?: 25 வயதுடைய ஒரு நபர் மாதம் ரூ.25,000 சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது அடிப்படை சம்பளம் ரூ.15,000. இந்த நபருக்கு ரூ.1 கோடி ரூபாய் EPF நிதி உருவாக்க எவ்வளவு காலம் ஆகும்? என்பதைப் பார்ப்போம்.
சம்பள உயர்வு காரணமாக அந்த நபரின் EPF பங்களிப்பு ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கும் என்று வைத்துக்கொள்வோம்.
அடிப்படை சம்பளம் - ரூ 15,000
மொத்த EPF பங்களிப்பு (அடிப்படை சம்பளத்தில் 12% + 3.67% ) = ரூ. 1750+550 = மாதம் ரூ.2300
இதன்படி மாதம் ரூ.2300 செலுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பை 10% அதிகரித்தால், EPF-இன் கீழ் ரூ.1 கோடியை உருவாக்க 30 ஆண்டுகள் ஆகும். அப்படியானால் தங்களுடைய 55-வது வயதில், தனிநபர் ரூ.1.07 கோடியை திரும்பப் பெறலாம்.
நீங்களும் உங்களுக்கு தகுந்தவாறு EPF திட்டத்தில் பங்களிப்பு செய்வதன் மூலம் உங்களுடைய இலக்கை எளிதில் அடையலாம். மேலே கூறப்பட்ட தகவல்கள் 25,000 சம்பளம் பெறும் ஒருவர் தன்னுடைய 25-ஆவது வயதில் சேமிக்கத் தொடங்கினால் 55 வயதாகும்போது எவ்வளவு தொகையை பெறுவார்? என்பதை எடுத்துக்காட்டவே.
இந்த ஒட்டுமொத்த கணக்கீட்டிற்கும் நாங்கள் 8.25 சதவீத வட்டியை வைத்துக் கொண்டோம். இந்த வட்டி விகிதங்களில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் வருமானத்தில் சற்று ஏற்றமோ இறக்கமோ இருக்கலாம். எப்படி சேமித்தால் எவ்வளவு லாபம் பெறலாம்? என்பதற்காக தான் இந்த கட்டுரை. இதன் மூலம் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். எனவே எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு தக்க ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications