முதலீட்டாளர்கள் பலர் தாங்கள் செய்யும் முதலீடு சீக்கிரம் டபுளாக வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் சிலர் தெரியாத நபரிடம் சிக்கி லட்சங்களில் பணத்தை இழந்து வருகின்றனர். இதற்கு பதிலாக அரசு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களில் பணத்தைப் போட்டால் அது எப்போது டபுள் ஆகும் என்று தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம். இதை செய்வதால் மோசடிக்காரர்களிடம் பணத்தை இழக்கும் பிரச்சனை குறையும்.
உங்கள் முதலீடு எப்போது டபுள் ஆகும்?: நீங்கள் செய்யும் முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதை கண்டுபிடிக்க ரூல் ஆஃப் 72 என்ற விதி இருக்கிறது. இந்த ஒரு ரூலை பயன்படுத்தியே எப்போது நீங்கள் செய்யும் முதலீடு டபுள் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரூலை பயன்படுத்த 72 என்ற நம்பரை நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்திற்கு கிடைக்கும் ஆண்டு வருவாயுடன் வகுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். அதற்கு வருடாந்திர வட்டியாக 10 சதவீதம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்தத் தொகை ரூ.2 லட்சமாக மாற 72/10 = 7.2 ஆண்டுகள் எடுக்கும். அதே வேறொரு திட்டத்தில் 8% வட்டி கிடைக்கிறது என்றால் உங்களுடைய ரூ.1 லட்சம் முதலீடு ரூ.2 லட்சமாக மாற 72/9=9 ஆண்டுகள் எடுக்கும்.
ரூல் ஆஃப் 72 = 72 / வருடாந்திர வட்டி விகிதம்
6 சதவீத வட்டி விகிதத்தில் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய ரூ.1 லட்சம் முதலீடு சுமார் 12 ஆண்டுகளில் ரூ. 2 லட்சமாக மாறும்.
இதை எந்த ஒரு திட்டத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்களால் எளிதில் எப்போது பணம் டபுளாகும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக பெரும்பாலான வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வருடாந்திர வட்டி 6 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. 8.5% வட்டி விகிதம் வழங்கப்படும் பட்சத்தில், 8.4 முதல் 12 ஆண்டுகளில் உங்களுடைய பணம் டபுள் ஆக மாறும். இதை நீங்கள் அரசு திட்டத்திற்கும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, ரெக்கரிங் டெபாசிட் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா போன்ற பல திட்டங்கள் இருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் 72 விதியை பயன்படுத்தி அரசு திட்டங்களில் போடப்படும் பணம் எப்போது இரட்டிப்பாகும் என்பதை தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம்.
உங்களுக்கு கிடைக்கும் விடை தான் எத்தனை ஆண்டுகளில் உங்கள் பணம் டபுளாகும் என்பதை சொல்லும். இதற்கு மாறாக ஒரு நாளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்று சொல்லும் எல்லா திட்டங்களும் போலியானவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications

