ஒரு நபர் எத்தனை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்? நிபுணர் பதில்..!!

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகும் நிலையில் ஒரு நபர் எத்தனை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பலரும் அதிக ஃபண்டுகளில் முதலீடு செய்வதுதான் சிறந்த டைவர்சிஃபிகேஷன் என நினைக்கிறார்கள். ஆனால், நிதி ஆலோசகர்கள் இது தவறான புரிதல் என்கின்றனர். Flexi Capital நிறுவனத்தின் நாசர் சலீம் பிஸ்னஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

ஒரு நபர் எத்தனை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்? நிபுணர் பதில்..!!

ஒரு போர்ட்ஃபோலியோவில் 3 முதல் 6 ஃபண்டுகள் வரை வைத்திருப்பது மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் போதுமான அளவு என கூறுகிறார். 1 அல்லது 2 ஃபண்டுகள் மட்டும் என்பது குறைந்த அளவில் இருப்பதால், உங்கள் பணமும் ஒரே மாதிரியான சந்தை பிரிவில் முடங்கிவிடும். அந்த பிரிவு சரியாக செயல்படவில்லை என்றால், உங்கள் முதலீட்டுக்கு மாற்று பாதுகாப்பு இருக்காது என்கிறார்.

அதே வேளையில் பலரும் அதிக ஃபண்டுகள் இருந்தால் அதிக பாதுகாப்பு என நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. உங்களிடம் 10 அல்லது 12-க்கும் மேற்பட்ட ஃபண்டுகள் இருந்தால், உங்களால் மேலாண்மை செய்ய முடியாது என்கிறார். எனவே 3 முதல் 6 ஃபண்டுகள் அவற்றை இண்டெக்ஸ், லார்ஜ் கேப், ஸ்மால்ட் கேப் என பிரித்து முதலீடு செய்தால் போர்ட்போலியோ பேலன்ஸாகும் என அறிவுரை வழங்குகிறார்.

Also Read

10க்கும் அதிகமான மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வெவ்வேறு ஃபண்ட் ஹவுஸ்கள் அல்லது வெவ்வேறு பெயர்களில் ஃபண்டுகள் இருந்தாலும், அவைகள் வாங்கியுள்ள பங்குகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும் என கூறுகிறார். உதாரணமாக, நீங்கள் நான்கு வெவ்வேறு லார்ஜ்-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நான்கும் நிஃப்டி 50 நிறுவனங்களின் பங்குகளில் அதிக முதலீடு செய்திருந்தால், நிஃப்டி சரிவடையும்போது உங்கள் நான்கு ஃபண்டுகளுமே ஒரே நேரத்தில் கடுமையாக வீழ்ச்சியடையும் என்கிறார்.

மேலும் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டும் நிர்வாக கட்டணமாக 'எக்பென்ஸ் ரேஷியோவை' வசூலிக்கிறது. இரண்டு ஃபண்டுகளில் 60% பங்குகள் ஒரே மாதிரியாக இருந்தால், ஒரே மாதிரியான பலனுக்காக நீங்கள் இரண்டு இடங்களிலும் தனித்தனியாக கட்டணம் செலுத்துகிறீர்கள் என அர்த்தம். எனவே ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் 2 முதல் 3 ஃபண்டுகள், அதிலும் லார்ஜ்-கேப் அல்லது ஃபிளெக்ஸி-கேப் ஃபண்ட் என நிலையானவற்றில் முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறார்.

Recommended For You

அனுபவமிக்க முதலீட்டாளர்கள் 5 முதல் 6 ஃபண்டுகளில் முதலீட் செய்யலாம் என்றும் ஸ்மால்-கேப் ஃபண்ட் மற்றும் இன்டர்நேஷனல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம் என்றும் கூறுகிறார். மியூச்சுவல் ஃபண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, ஒவ்வொரு ஃபண்டும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் என்ன தனித்துவமான பங்கை வகிக்கிறது என்பதை கவனிப்பதே புத்திசாலித்தனம். சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முதல் 6 ஃபண்டுகள் மூலமாகவே உங்களது அனைத்து நீண்ட கால நிதி இலக்குகளையும் வெற்றிகரமாக அடைய முடியும் என பரிந்துரைக்கிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+