சென்னை: இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யக்கூடிய தனிநபர்கள் பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அப்படி எத்தனை முறை பழைய வரி நடைமுறையில் இருந்து புதிய வரி நடைமுறைக்கும் புதிய வரி நடைமுறையிலிருந்து பழைய வரி நடைமுறைக்கும் மாறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் வருமானம் ஈட்டக்கூடிய தனி நபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும். இந்தியாவில் பழைய வரி நடைமுறை மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டு முறைகளில் நாம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். வருமான வரி இணையதளத்தில் டீபால்ட் ஆகவே புதிய வரி நடைமுறை தான் காட்டும் தேவைப்பட்டால் நாம் பழைய வரி நடைமுறையை கிளிக் செய்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். சம்பளம் பெறக்கூடிய தனி நபர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த இரண்டு நடைமுறைகளுக்கும் இடையே மாறிக்கொள்ளலாம்.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக தான் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் பழைய வரி நடைமுறையை போல பெரிய அளவில் வரிச்சலுகைகள் வழங்கப்படுவது கிடையாது. ஆனால் அதிகபட்ச வருமான வரி உச்சவரம்பு வழங்கப்படுகிறது. இதனால் தான் அரசு பெரும்பாலான மக்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வரி சலுகைகளையும் அறிவித்த வண்ணம் வருகிறது.
வருமான வரித்துறை இணையதளம் தெரிவிக்கும் தகவலின் படி இந்தியாவில் தொழில் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் அத்தனை எளிதாக பழைய வரி நடைமுறையில் இருந்து புதிய வரி நடைமுறைக்கும், புதிய வரி நடைமுறையில் இருந்து பழைய வரி நடைமுறைக்கும் மாறிவிட முடியாது. அவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் வழங்கப்படுகின்றன. தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் புதிய வரி நடைமுறையிலிருந்து பழைய வரி நடைமுறைக்கு மாறிவிட்டால் அவர்களால் மீண்டும் புதிய வரி நடைமுறையை தேர்ந்தெடுக்க முடியாது என வருமான வரித்துறை கூறுகிறது.
எனவே தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இரண்டிலும் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவே சம்பளம் பெறக்கூடிய தனி நபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய வரி கணக்கு தாக்கல் நடைமுறையை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அரசு குறிப்பிட்டுள்ள வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் முடிவதற்கு முன்னரே இதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பழைய வரி நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் தான். ஆனால் புதிய வரி நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய். பழைய வரி முறையில் குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதில் வீட்டு வாடகை அலோவென்ஸ்கள், பிபிஎஃப் உள்ளிட்ட முதலீடுகளுக்கான பங்களிப்பு, வீட்டு கடனுக்கு செலுத்தும் வட்டி தொகைகளை குறிப்பிட்டு வரி சலுகை பெறலாம்.புதிய வரி முறையில் இத்தகைய வரி சலுகைகள் இல்லை என்றாலும் இதில் குறைந்தபட்ச வரியும் அதிகபட்ச வரி உச்சவரம்பும் வழங்கப்படுகிறது. எனவே இரண்டையும் ஆய்வு செய்து தனிநபர்கள் முடிவெடுக்க வேண்டும்.
More From GoodReturns

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications