போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை காட்டிலும் பாதுகாப்பான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அரசாங்கம் இது போன்ற திட்டங்களை வழங்குவதனால் தான். சிறு தொகையை மாதாமாதம் முதலீடு செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், ஒருமுறை முதலீடு செய்துவிட்டு லாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு திட்டங்கள் உள்ளன.
அந்த வகையில் முதலீடு செய்பவர்களுக்கு மாதாமாதம் வருமானம் தரும் ஒரு திட்டம் தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS). இந்தப் பதிவில் 5 லட்சம் ரூபாய் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்தால்.. எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இந்த போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்திற்கு ஒருவர் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம். மேலும் முதலீடாளர்கள் வெறும் 1000 ரூபாயில் கணக்கைத் திறக்க முடியும்.
தனிநபராக முதலீடு செய்தால் அதிகபட்ச வரம்பு 9 லட்சம். அதுவே கூட்டுக் கணக்காக முதலீடு செய்ய விரும்பினால் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதன் பின் நீங்கள் எந்தவித முதலீடும் செய்ய வேண்டியிருக்காது. போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி வருமானம் செலுத்தப்படும்.
MIS திட்டத்தின் நன்மைகள்: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் வரையிலான வரி சலுகைகள் கிடைக்கும்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: தற்போது MIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் 5 லட்ச ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் 3,083 ரூபாய் வருமானமாக பெற முடியும். அதாவது இந்த திட்டத்தின் லாக்கின் காலமான 5 ஆண்டுகளுக்கும் இந்த வட்டி வருமானம் கிடைக்கும்.
வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால்.. இது போல் ஒரு முறை முதலீடு செய்து அந்த வட்டி வருமானத்தை வைத்து வாடகை செலுத்தலாம். இது வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
அதுவே MIS திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ. 5,550 மாத வட்டி வருமானத்தைப் பெறலாம். கூட்டுக் கணக்கில் ஒரு முறை ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு ரூ. 9,250 மாத வட்டி வருமானத்தைப் பெறலாம்.
சிலர் அதிக தொகையை முதலீடு செய்து மாத வருமானத்தை அதிகரிக்க விரும்பலாம். சிலரிடம் அவ்வளவு தொகை இல்லாமல் இருக்கும். எனவே நீங்களும் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். அதற்கு நீங்கள் ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
ஆன்லைன் கால்குலேட்டர்கள் மூலம் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்ற விவரங்களை கொடுக்கும்போது.. எவ்வளவு மாதம் வருமானம் கிடைக்கும்.. என்ற விவரங்களை நீங்கள் எளிதில் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் 5 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்களே. மேலும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஐடியாவுக்காக கொடுக்கப்பட்ட விவரங்கள் மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு.. உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications