சென்னை: சம காலத்தில் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பது என்பது அத்தனை எளிய விஷயமாக இல்லை. குறிப்பாக குழந்தை கரு உருவாவதில் தொடங்கி குழந்தையை பெற்றெடுத்து அந்த குழந்தையை வளர்த்து பள்ளிக்கு அனுப்புவது என பல செலவுகள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன.
குழந்தை வளர்ப்பு: நாம் வளர்ந்ததைப் போல தற்போது நிலைமை கிடையாது நாம் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கட்டணமாக எவ்வளவு தொகையை செலுத்தினோமோ அந்த தொகையை தற்போது நம் பிள்ளைகளின் 1ஆம் வகுப்புக்காகவே நாம் செலவிட வேண்டி இருக்கிறது. அந்த அளவிற்கு கல்வி சார்ந்த செலவினங்களும், குழந்தைகள் சார்ந்த மற்ற செலவுகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. அதுவும் நீங்கள் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் உங்களுடைய சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை மாதம் தரும் குழந்தைகளின் செலவுக்கென்றே ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கிறது.

வீடா, குழந்தையா: பைனான்சியல் இன்ஃப்ளூயன்சரான அபிஷேக் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இதனை மிக விரிவாக பதிவிட்டுள்ளார். அதில் குழந்தையை வளர்க்க எவ்வளவு செலவாகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம் , ஒரு குழந்தையும் பெற்று வளர்க்கலாம் ஆனால் 2025 ஆம் ஆண்டில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தான் உங்களால் செய்ய முடியும் என உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார் .
எவ்வளவு தேவை: மிடில் கிளாஸ் இந்தியர்களுக்கு இது ஒரு கசப்பான உண்மை , நகர்ப்புறங்களில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதற்கு குறைந்தது 45 லட்சம் செலவாகிறது என கூறியிருக்கிறார். இது இரண்டாம் நிலை நகரத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை அல்லது ஒரு சராசரி இந்திய குடும்பத்தின் பத்தாண்டு கால சம்பளம் என சுட்டிக்காட்டி இருக்கிறார் . இந்தியாவை சேர்ந்த நவீன கால பெற்றோர்கள் ஒரு புதுமையான சிக்கலில் இருக்கின்றனர். அன்பு, பாரம்பரியம், சமூக எதிர்பார்த்து ஆகியவற்றுக்கு இடையே சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். ஒரு குழந்தைக்கு 6 முதல் 17 வயது வரை பள்ளிக்கு அனுப்புவதற்கு மட்டுமே 17 லட்சம் ரூபாய் செலவாகிறது. தனியார் பள்ளியில் சேர்த்தோம் என்றால் ஆண்டுதோறும் 2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.

என்ன செலவு?: குழந்தையை டே கேர் மையங்களில் விட்டால் அதற்கே மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும், அடுத்தது மருத்துவ செலவுகள் வந்துவிட்டால் அது எவ்வளவு ஆகும் என்பதை நம்மால் கணிக்க இயலாது. இந்தியாவில் மருத்துவ பணவீக்க விகிதம் 14 சதவீதம் என கூறியுள்ளார். கிரிக்கெட் கோச்சிங், டேன்ஸ் கிளாஸ் என மற்ற செயல்பாடுகளுக்கு 25,000 முதல் 50,000 ரூபாய் செலவிட வேண்டி இருக்கும் . அப்படி கணக்கிட்டு பார்த்தால் இந்திய மிடில் கிளாஸ் குடும்பத்தின் மொத்த வருமானத்தில் 57 சதவீத தொகை ஒரு குழந்தையை வளர்ப்பதற்காகவே சென்று விடுகிறது என குறிப்பிடுகிறார்.
என்ன மாற்றம் தேவை: அரசாங்க பள்ளிகளில் இலவச கல்வி கிடைக்கிறது ஆனால் அங்கே அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் பெரும்பாலான பெற்றோர் தவிர்க்கின்றனர் என கூறும் அவர் குழந்தைக்கு இந்த வயதிலேயே இந்த புத்தகம் வாங்கி கொடுங்கள் இந்த பொம்மை வாங்கி கொடுங்கள் , இந்த வகுப்புக்கு அனுப்புங்கள் இன்ஸ்டாகிராமில் வரக்கூடிய அறிவுரைகள் ஒரு பக்கம் என இந்த கால பெற்றோருக்கு பல அழுத்தங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
கடனையா கற்றுத் தருவது?: என்னுடைய குழந்தைக்காக நான் இதை செய்கிறேன் என்ற மனநிலை தான் பெரும்பாலான மிடில் கிளாஸ் பெற்றோர் நிதி சுமையில் சிக்கித் தவிப்பதற்கு காரணம் என கூறும் அபிஷேக், ஒரு விஷயத்தை நீங்கள் சிந்தித்து பாருங்கள் தனியார் பள்ளியில் சேர்க்க மாட்டேன் அதற்கு பதிலாக அந்த பணத்தை குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வேன், என் குழந்தைக்கு பிராட்டிக்ல் திறன்களை கற்று தருவேன், யாரோ ஒருவர் செய்தார் என்பதற்காக என்னுடைய குழந்தைக்கு நான் அதை வாங்கி தர வேண்டும் என அவசியம் இல்லை , எனக்கென ஒரு குழந்தை வளர்ப்பு முறை இருக்கிறது அதை நான் பின்பற்றுகிறேன் என உங்கள் மனநிலையை மாற்றுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
நிதி சுமையா?: ஏனெனில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டியது நிதி சார்ந்த கல்வி தானே தவிர கடன்களை அல்ல என குறிப்பிட்டு இருக்கிறார் . அவருடைய இந்த பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றி இருக்கின்றனர். இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பதே நிதி சுமையாகிவிட்டது என சிலரும் நாம் நினைத்தால் செலவுகளை குறைக்க முடியும் என சிலரும் பதில் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications