இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் சேமிக்கலாம். இப்ப தானே வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். கொஞ்ச நாள் ஜாலியா இருக்க வேண்டும் என்று, நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு நாளும், உங்கள் எதிர்கால கோடீஸ்வர கனவை தள்ளிப் போக வைக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி (SIP) முறையில் முதலீடு செய்ய நீங்கள் காட்டும் ஒவ்வொரு நாள் தாமதமும், உங்கள் ஓய்வுக்காலத்தில் பெரிய அளவிலான தொகையை இழக்க செய்யும் என்றால் நம்ப முடிகிறதா? இது வெறும் பயமுறுத்தல் அல்ல, கூட்டு வட்டியின் கணக்கு.
உதாரணத்திற்கு இரு நண்பர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். சம்பளமும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம் தான். இருவரும் மாதம் 10,000 ரூபாயை முதலீடு எஸ்ஐபி-ல் முதலீடு செய்கிறார்கள். வருடத்திற்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம்.

இதில் ஏ என்ற முதல் நபருக்கு 30 வயது, பி என்ற இரண்டாவது நபருக்கு 25 வயது ஆகிறது. இதில் ஏ என்ற நபர் தனது 30 வயதில் தான் எஸ்ஐபி முதலீட்டை தொடங்குகிறார். ஆனால் பி 25 வயதிலேயே முதலீட்டை செய்கிறார். இருவரும் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இந்த இரு போர்ட்ஃபோலியோவில் எந்த மாறுதல்களும் இல்லை. ஆனால் முடிவு மட்டும் மிக பிரம்மாண்ட வித்தியாசத்தை கொண்டுள்ளது.
இருவருமே ஓய்வு காலத்தை திட்டமிட்டே முதலீடு செய்கிறார்கள். அதில் ஏ என்ற நபர் 60 வயது வரை மொத்தம் 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். அவருடைய கார்ப்பஸ் 3.52 கோடி ரூபாயாகும். இதே பி என்ற நபர் 42 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். அவருடைய கார்ப்பஸ் 6.49 கோடி ரூபாயாகும். இங்கு வித்தியாசம் வெறும் 5 வருடங்கள் தான். ஆனால் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுள்ளது. இதுவே கூட்டு வட்டியின் மாயஜாலம்.
பலரும் நினைக்கலாம், ஆரம்பத்தில் ஐந்து வருடம் தாமதமானால் என்ன, கடைசி ஐந்து வருடத்தில் கூடுதலாக சேர்த்து முதலீடு செய்து கொள்ளலாமே என நினைக்கிறார்கள். ஆனால் கணித ரீதியாக அது தவறு. முதலீட்டில் ஆரம்பத்தில் நீங்கள் காட்டும் சுணக்கம், உங்கள் அறுவடை காலத்தில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை உருவாக்கும்.
முதலீடு செய்த முதல் 10 முதல் 15 ஆண்டுகளில் பெரிய வித்தியாசம் தெரியாது. இரண்டு பேருடைய போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் செல்வது போல் தான் இருக்கும். ஆனால், காலம் செல்லச் செல்லத்தான் அந்த மேஜிக் ஆரம்பிக்கும். ஏனெனில் கூட்டு வட்டி ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதில்லை. அது ஒரு கட்டத்திற்கு மேல் ராக்கெட் வேகத்தில் துரித மடையும். 25 வயதில் தொடங்கினால் முதிர்வு தொகை சுமார் 6.4 கோடி ரூபாயாகவும் பெருகும். இதே 30 வயதில் தொடங்கும்போது 3.5 கோடி ரூபாயாகவும், 35 வயதில் தொடங்கினால் 1.9 கோடி ரூபாயாகவும் குறையும்.
உங்கள் மொத்த சேமிப்பில் மிகப்பெரிய பங்கு, நீங்கள் முதலீடு செய்த கடைசி 5 முதல் 10 ஆண்டுகளில் தான் உருவாகிறது. ஆரம்ப ஆண்டுகள் அஸ்திவாரம் போடுவதற்கே சரியாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகள் சேர்த்து வைத்த அந்த பெரிய தொகைக்கு வட்டி குட்டிகள் போட ஆரம்பிக்கும் போது, நீங்கள் புதிதாக போடும் பணத்தை விட, ஏற்கனவே இருக்கும் பணம் அதிக உழைப்பை கொடுக்கும். நீங்கள் 5 வருடம் தாமதம் செய்யும் போது, சில தவணைகளை மட்டும் இழக்கவில்லை. மாறாக கூட்டு வட்டியின் உச்சகட்ட பலன் கிடைக்கும் அந்த கோல்டன் பீரியடை இழக்கிறீர்கள். இங்கு உங்களுக்கான கால அவகாசத்தை இழக்கிறீர்கள். உங்கள் பணத்தை விட அதிக மதிப்புடைய நேரம் தான் இங்கு முக்கியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications

