நாம் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வு காலத்திற்கு என சேமித்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. அரசாங்கமும் இதற்காகத்தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஓய்வு காலத்தை பொறுத்தவரை அப்பொழுது நமக்கு வருமானம் இருக்காது ஆனால் மருத்துவ செலவுகள் உட்பட பல்வேறு செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் ஒரு கணிசமான தொகை நம்மிடம் நிதி தொகுப்பாக இருந்தால் சௌகரியமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது இருக்கக்கூடிய செலவினங்களை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு வளமான ஓய்வு காலத்தை வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையை ஹெச்எஸ்பிசி வெளியிட்டு இருக்கிறது.

Affluent Investors Snapshot 2025 என்ற பெயரில் ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் சௌகரியமான ஓய்வுகாலம் வேண்டும் என்றால் 3.5 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி தொகுப்பாக நம்மிடம் இருக்க வேண்டும் என கூறுகிறது. இந்தியாவை சேர்ந்த செல்வமிக்க நபர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகளை ஹெச்எஸ்பிசி வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஓய்வு கால நிதிக்கான தொகை சற்றே உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது.
மொத்தம் 12 நாடுகளை சேர்ந்த செல்வ வளம் மிக்க முதலீட்டாளர்களிடம் இந்த ஆய்வு அறிக்கையை நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து 1006 பேர் பங்கேற்றனர் . அவர்கள் அளித்த பதில்களின் படி ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் 90 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் பண வீக்கம் குறித்து அதிக கவலை தெரிவித்திருக்கின்றனர். அதே வேளையில் 92 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் ஒழுக்கமான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால் நிச்சயம் நினைத்த நிதி தொகுப்பை எட்டி விட முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்திய செல்வந்தர்கள் தங்கள் போர்ட்போலியோவில் எப்போதுமே 15%ஐ ரொக்க பணமாக வைத்திருப்பார்களாம் அது தற்போது 10% என குறைந்துள்ளது. பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதற்கு மாற்றாக அதை தங்கத்திலும் ஈக்விட்டி பங்குகளிலும் முதலீடு செய்கிறார்களாம். மேலும் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது ஏழு சதவீதம் உயர்ந்திருப்பதாக சுட்டி காட்டுகிறது இந்த அறிக்கை.
பணவீக்கத்தை விட அதிக லாபம் தரும் ஒரு முதலீட்டு கருவியாக தங்கம் இருப்பதாக பெரும்பாலான இந்திய முதலீட்டாளர்கள் பதில் தெரிவித்திருக்கின்றனர். 39 சதவீதம் பேர் தங்கத்தை நகை, நாணயம் அல்லது பார்களாக வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அதனை பிசிக்கலாக வாங்கி வைப்பதே சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதை நம்பகமானதாக கூறியுள்ளனர். இவ்வாறு முதலீடு செய்பவர்களில் 66% பேர் சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளை பின்பற்றுவதாக கூறியிருக்கிறார்களாம். அதே வேளையில் இறுதி முடிவு எடுப்பதற்கு இந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் நேரடியாக கலந்துரையாடிய பிறகு தான் முடிவெடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications