டெல்லி: பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
குறிப்பாக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்ற ஒரு மிகப்பெரிய நிவாரணத்தை வருமான வரி செலுத்துவோருக்கு அவர் வழங்கினார். பட்ஜெட்டில் வெளியான வருமான வரி சம்பந்தப்பட்ட மாற்றங்கள் அனைத்துமே வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்தியாவில் தற்போது புதிய வரி கணக்கு நடைமுறை பழைய வரி கணக்கு நடைமுறை ஆகிய இரண்டும் நடைமுறையில் இருக்கின்றன. அரசை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் புதிய வரிமுறைக்கு மாற வேண்டும் என விரும்புவதால் தொடர்ந்து புதிய வரி நடைமுறையில் தான் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அண்மையில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டிலும் புதிய வரி கணக்கு நடைமுறையிலேயே பல்வேறு சலுகைகளை வெளியிட்டார்.
வருமான வரி விகிதங்கள்
| வருமானம் | வரி விகிதங்கள் (%) |
|---|---|
| 0 - 4,00,000 | 0 |
| 4,00,001 - 8,00,000 | 5 |
| 8,00,001 - 12,00,000 | 10 |
| 12,00,001 - 16,00,000 | 15 |
| 16,00,001 - 20,00,000 | 20 |
| 20,00,001 - 24,00,000 | 25 |
| 24,00,001 மற்றும் மேல் | 30 |
புதிய வரிச் சலுகைகளின் படி ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு எந்த ஒரு வரியும் கிடையாது. அதே போல ஆண்டுக்கு 12.75 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் இனி எந்த வரியும் செலுத்த வேண்டியது கிடையாது. இதற்கு முன்பு புதிய வரி கணக்கு நடைமுறையில் 3- 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 25,000 ரூபாய் வரிக்கழிவு வழங்கப்பட்டது, தற்போது 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு அது 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 20 - 24 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்ட தனி நபர்கள் இதற்கு முன்பு 30 சதவீத வருமானவரி விகிதத்தில் இருந்து தற்போது 25 சதவீத வருமான வரி விகிதத்திற்குள் வந்துள்ளனர். இதனால் இதுநாள் வரை 30 சதவீத வருமான வரி செலுத்தியவர்கள் இனி 25 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும்.
புதுப்பிக்கத்தக்க வரி விகிதங்களின்படி 12.75 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் எந்த ஒரு வரியும் செலுத்த மாட்டார்கள். 12 - 24 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் தங்களுடைய வரி விகிதத்தில் 5 சதவீதம் வரை குறைந்திருப்பதை காண்பார்கள். 24 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்கள் புதிய வரிச் சலுகைகளின் படி ஆண்டுக்கு 1.1 லட்சம் ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும்.
Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications