மாசம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபருக்கு வீட்டு கடன் எவ்வளவு கிடைக்கும்? இந்த ஃபார்முலா தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்குவது வங்கிகள் வழங்கக்கூடிய கடன்கள் தான். வீடு மட்டுமல்ல வாகனம் வாங்குவது ,மொபைல் போன் வாங்குவது, வீட்டுக்கு தேவையான ஃப்ரிட்ஜ் ,வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்குவதற்கு என பலவற்றுக்கும் கடன் வாங்குகிறார்கள்.

வங்கியில் கடன் வாங்க திட்டமிடபவர்கள் தங்களுடைய வருமானம் எவ்வளவு அந்த வருமானத்திற்கு வங்கியில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க கடன் தவிர்த்து ஒரு தனிநபருக்கு மற்ற அனைத்து வகையான கடன்களை வழங்குவதற்கும் மாதாந்திர சம்பளத்தை அடிப்படையாக பார்ப்பார்கள். இதனை கொண்டுதான் கடன் தொகையை நிர்ணயம் செய்வார்கள்.

மாசம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபருக்கு வீட்டு கடன் எவ்வளவு கிடைக்கும்?

அந்த நபரின் சம்பளம் என்ன, எந்த துறையில் வேலை செய்கிறார்கள், மாதாந்திர வருமானதில் அவரால் எவ்வளவு தொகையை ஒவ்வொரு மாதமும் நமக்கு திரும்ப வழங்க முடியும் என்பதை நிர்ணயம் செய்வார்கள். இதனை Fixed Obligation to Income Ratio (FOIR) என அழைக்கிறார்கள். பொதுவாக மாதாந்திர சம்பளத்தில் 50 சதவீதத்திற்குள் தான் ஒரு நபருக்கான மாதாந்திர இஎம்ஐ தொகையாக நிர்ணயம் செய்யப்படும்.

Also Read

வங்கியிடம் மாதம் இஎம்ஐ செலுத்த முடியக்கூடிய அளவுக்கான தொகை தான் உங்களுக்கு கடனாக வழங்குவார்கள். 50,000 சம்பளம் வாங்கும் நபருக்கு குடும்ப செலவுகள் இருக்கும் அந்த மொத்த தொகையும் இஎம் ஐ செலுத்த முடியாது. எனவே பெரும்பாலும் சம்பளத்தில் 50% தொகை மாத தவணையாக செலுத்தும் வகையில் கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும்.

ஒரு நபர் மாதம் 50,000 சம்பளமாக பெறுகிறார். அவர் வீட்டு கடன் வாங்க முயற்சி செய்கிறார் என வைத்து கொள்வோம். ஆண்டுக்கு 9% என்ற வட்டி விகிதத்தில் அவருக்கு கடன் கிடைக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு அவர் கடனை திரும்ப செலுத்தும் காலம் என வைத்து கொண்டால் வீட்டுகடனாக 28 லட்சம் ரூபாய் வரை பெற அவர் தகுதி பெறுவார். இதனை மாதம் 25 ஆயிரம் ரூபாய் என இஎம் ஐ -ஆக வங்கிக்கு திரும்ப செலுத்துவார்.

Recommended For You

ஒருவேளை இவருக்கு ஏற்கனவே வங்கி கடன் கிடைக்கிறது என்றால் அந்த மாதாந்திர தவணை 5000 ரூபாய் என வைத்து கொண்டால் மாதம் 20000 ரூபாய் இஎம்ஐ செலுத்தும் வகையில் கடன் தொகை மாறும். அதேபோல கடன் வாங்கக்கூடிய நபரின் வயது மற்றும் அவரது செய்யக்கூடிய வேலையும் முக்கியமாக கருதுவார்கள் . இளம் வயதினருக்கு அதிக கடன் தொகையும் எளிதாகவும் கடன் கிடைக்கும். ஏனெனில் அவர் அடுத்து வேலை செய்து சம்பாதிக்கும் ஆண்டு காலம் அதிகம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+