படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆண்டுகள் வரை நாம் சம்பாதிக்கிறோம். அதில் ஓய்வு காலத்திற்குப் பிறகு ஒரு சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் பணம் சேமிக்க விரும்புகிறோம்.
இந்த தருணத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வேண்டும் நாம் ஓய்வு பெறும்போது நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? ஓய்வு காலத்தில் ஒருவருக்கு எவ்வளவு பணம் தேவை?

உங்களது வாழ்க்கை முறை மற்றும் தற்போது உங்களிடம் உள்ள முதலீடுகள் , உங்களுடைய செலவு நடைமுறைகள் மற்றும் உடல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை முடிவு செய்ய முடியும்.
ஏனெனில் ஓய்வுகாலத்திற்கு பிறகு உங்களுக்கு ஊதியம் என்பது இருக்காது, ஆனால் செலவுகள் தற்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும். எனவே அவற்றை கொண்டு திட்டமிட வேண்டும்.
ஓய்வுகாலத்திற்கு தேவையான திட்டமிடலை எளிமையாக்குவதற்காக செபி தன்னுடைய இணையதளத்திலேயே கால்குலேட்டர் ஒன்றை இணைத்துள்ளது.
இந்த பக்கத்திற்கு (https://investor.sebi.gov.in/calculators/financial_goal_planner.html) சென்று எளிதாக நம் ஓய்வுகாலத்திற்கான தொகையை கணக்கீடு செய்யலாம்.
என்னென்ன விவரங்கள் கேட்கப்படும்: தற்போது உங்களின் மாதாந்திர மற்றும் வருடாந்திட செலவு எவ்வளவு? ஓய்வு காலத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர செலவு எவ்வளவு ஆகும் என கணிக்கிறீர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
தற்போதைய வயது என்ன? எந்த வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள்? தற்போது நீங்கள் செய்துள்ள முதலீடுகளின் விவரங்கள், பிஎஃப் உள்ளிட்ட தகவல்களை வழங்கும் பட்சத்தில் எளிதாக அது கணக்கிட்டு உங்களுக்கு ஓய்வு பெறும் போது கையில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்ற விவரத்தை வழங்குகிறது.
உதாரணமாக மணி என்பவருக்கு 35 வயதாகிறது, 60 வயதில் ஓய்வுபெற விரும்புகிறார். 80 வயது வரை வாழ முடியும் என நினைக்கிறார் என வைத்து கொள்வோம். ஓய்வுபெறும் போது மாதம் 50,000 ரூபாய் செலவாகும் என வைத்துக் கொள்வோம். அவரிடம் தற்போது முதலீடு என எதுவும் கிடையாது.
ஓய்வுபெறும் போது நிறுவனம் 10 லட்சம் ரூபாய் தருவதாக வைத்து கொள்வோம், அது தவிர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது, அதற்கு 8% வட்டி கிடைக்கிறது. இந்த தகவல்களை உள்ளீடு செய்கையில் மணி என்பவர் ஓய்வுகாலத்தில் தன்னிடம் 15.22 லட்சம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்.
பணவீக்க விகிதம் 8% என கணக்கீடு கொண்டு இது கணக்கு செய்துள்ளது. இதில் முதலீடுகள் இருந்தால் அவற்றை உள்ளீடு செய்தால் அதற்கு ஏற்ப மாறுபடும். நீங்கள் இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவைப்படும் தொகையை அறிந்து கொள்ளலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications