10 ஆண்டுகளில் ரூ.1 கோடி பெற மாதத்திற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

இந்தியாவில் தற்போது முதலீடு சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது . குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடிய பலரும் தங்களுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

முதலீடு செய்ய எண்ணுபவர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கினை நிர்ணயம் செய்து கொண்டு அந்த இலக்கை நோக்கி முதலீடு செய்ய வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாயை சேமித்து விட வேண்டும் அல்லது அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயை சேமித்து விட வேண்டும் என ஒவ்வொருவரும் அவருடைய வருமானத்திற்கு ஏற்பவும் முதலீடு செய்ய முடிந்த தொகைக்கு ஏற்பவும் இலக்கு நிர்ணயம் செய்து கொண்டால் நிச்சயமாக அதில் வெற்றி பெற முடியும் .

10 ஆண்டுகளில் ரூ.1 கோடி பெற மாதத்திற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். எஸ் ஐபி முறை முதலீடுகள் நமக்கு நிதி சார்ந்த ஒழுக்கம் தருகின்றன, அது தவிர சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப நம் சிறு முதலீட்டை பெரிதாக்கி தருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் அல்லது 15 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் என்ற இலக்கு எட்ட வேண்டும் என எண்ணுபவர்கள் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதன்படி ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கும் அவர் அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் 1 கோடி ரூபாய் இலக்கை ஏற்ற வேண்டும் என்றால் மாதம் தோறும் 45,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் உங்களுடைய கணக்கில் 1 கோடி ரூபாய் வந்துவிடும்.

அதுவே 15 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் இலக்கை எட்ட வேண்டும் என்பவர்கள் மாதம் தரும் 22000 ரூபாயை முதலீடு செய்தால் போதும் . அடுத்த 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயம் செய்திருப்பவர்கள் மாதம் தோறும் 6,000 ரூபாயை முதலீடு செய்தால் எளிதாக 1 கோடி ரூபாய் பெற முடியும். மாதம் 6000 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தான்.

எவ்வளவு இளம் வயதிலேயே எஸ்ஐபி ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு முன்னதாகவே ஆரம்பித்து விட்டால் நமக்கு வரக்கூடிய லாபம் அதிகமானதாக இருக்கும் பணத்தை நீண்ட காலத்திற்கு வளர விட்டால் அது நாம் எதிர்பாராத லாபத்தை நமக்கு தரும் , இதற்கு ஒரு சிறு தொடக்கம் தான் தேவை.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+