சென்னை: இந்தியாவில் தற்போது மாத சம்பளக்காரர்களுக்கு மத்தியில் விரைவிலேயே ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கும் வேளையில், அதற்கான நிதி தொகுப்பை முன்கூட்டியே உருவாக்கி வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. குறைந்தது 45 வயதுக்குள்ளாகவே ஓய்வு பெற்று விட வேண்டும் அல்லது இரண்டாவது வருமானம் வரக்கூடிய வகையில் ஒரு நிதி தொகுப்பினை உருவாக்கிவிட வேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.
அந்த வகையில் 31 வயதாக கூடிய ஒரு நபர் தன்னுடைய 45ஆவது வயதில் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற வேண்டுமென்றால் மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்ற குறித்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

31 வயதாக கூடிய அந்த நபருக்கு எந்த கடனும் கிடையாது,வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்,புதிதாக தனக்கு வீடு வாங்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். அவர் தற்போது தான் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மற்றும் மாதம் தோறும் அவற்றில் எவ்வளவு முதலீடு செய்கிறார் என்ற விவரங்களையும் வழங்கியுள்ளார். இதன்படி
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (Axis Small Cap): ரூ. 10,000
பிபிஎஃப்ஏஎஸ் (PPFAS Flexi Cap) :ரூ. 9,500
ஆக்சிஸ் மிட் கேப் (Axis Mid Cap) : ரூ. 9,000
கோடக் ஹைபிரிட் (Kotak Hybrid Fund): ரூ. 6,000
இன்வெஸ்கோ கோல்டு (Invesco Gold Fund): ரூ. 5,500
யுடிஐ (UTI Index Fund): ரூ. 5,000
மிரா டேக்ஸ் சேவிங் (Mirae Tax Saving Fund): ரூ. 4,000
மிரா லார்ஜ் & மிட் கேப் (Mirae Large & Mid Cap): ரூ. 1,500
ஐசிஐசிஐ (ICICI Small Cap): ரூ. 1,500
இவர் மொத்தமாக மாதந்தோறும் 52,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறாராம். அவருடைய இந்த கேள்விக்கு MyMoneyMantra.com தளத்தின் மேலான் இயக்குனரும் நிறுவனமான ராஜ்கோஸ்லா பதிலளித்துள்ளார்.
அதில் தற்போதைய எஸ்ஐபி முதலீடு பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தங்கம், மிட் கேப், ஸ்மால் கேப், ஃபிளெக்ஸி என அனைத்து பிரிவுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிப்பு இருக்காது என கூறியுள்ளார்.
தற்போது 31 வயதாகும் இவர், அடுத்த 15 ஆண்டுகளுக்கு தன்னுடைய மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் அதிகமான தொகையை ஈக்விட்டி மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்தால் கணிசமான லாபத்தை பெற முடியும் என கூறியுள்ளார்.
அதே போல 45 வயதினை நெருங்கும் போது தன்னுடைய போர்ட்போலியோவில் பெரும் பகுதியை ஹைபிரிட் மற்றும் பேலென்ஸ் ஃபண்டுகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இதன் மூலம் சந்தை ஏற்று இறக்கங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் இந்த மியூச்சுவல் பண்டுகள் மூலம் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு நிதி தொகுப்பை உருவாக்கி விட முடியும் என அவர் கூறியுள்ளார்.
அதாவது 3 முதல் 5 கோடி வரை உருவாக்கிட முடியும் என்றும் அதனை எஸ்டபிள்யூபி முறையில் மாற்றி மாதந்தோறும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு சான்றிதழ் பெற்ற நிதி ஆலோசகரிடம் போர்ட்போலியோவை காண்பித்து முதலீட்டை மாற்றியமைப்பது சிறந்ததாக இருக்கும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications