எஸ்ஐபி முதலீடு சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரையில் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் விரும்பும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப மாத மாதம் முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகப்பெரிய செல்வம் சேர்க்க ஒரு மிகப்பெரிய அம்சமாக உள்ளது எனலாம்.
இதன் மூலம் நீங்கள் மாத மாதம் சிறு சிறு தொகையினை சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் மாத மாதம் சேமிக்கும் தொகை சிறிய அளவிலிருந்தாலும், மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க முடியும்.
அவரவர் வசதிக்கேற்ப முதலீடு
எஸ்பிஐ முதலீடு சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். இதன் மூலம் அவரவர் ரிஸ்கிற்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ள முடியும். எஸ்ஐபி முதலீட்டு திட்டமானது நம்முடைய வாழ்க்கைக்கான முதலீடுகளைத் தானியங்கி முறையில் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
நீண்டகால இலக்கை எளிதாக அடையலாம்
எஸ் ஐ பி திட்டங்கள் நிர்வகிக்கப்பதற்கு எளிதாக இருக்கின்றன. முதலீட்டு காலத்தைப் பொறுத்து வருமானமும் இருக்கும். நீண்டகால முதலீடு அதிக வருமானத்தையும், குறுகிய கால முதலீடு மூலம் அதற்கேற்ப வருமானத்தையும் வழங்கும். இதில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டை விடப் பல மடங்கு வருமானத்தைப் பெற முடியும். உங்களுடைய வருமானம் உயர உயர உங்களுடைய இலக்குகளை விரைவில் அடைய முடியும்.
சிப் தான் சிறந்த ஆப்சன்
நிபுணர்களாக இருந்தாலும் சரி அல்லது புதியதாக முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி, முதலீடு செய்யச் சிறந்த ஆப்சன் சிப் (sip)எனலாம். இது 2023ல் உங்களது கார்ப்பஸினை அடைய மிக எளிய வழியாக இருக்கலாம். அந்த வகையில் 3- 5 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க வேண்டும். எனினும் இதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? வாருங்கள் பார்க்கலாம்.
ரூ.50 லட்சம் இலக்கு எப்படி?
மியூச்சுவல் பண்ட என்பதில் ரிஸ்க் என்பது இருந்தாலும், அதேபோல லாபமும் அதே அளவுக்கு உள்ளது எனலாம். சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் மாதம் 55,750 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 50 லட்சம் ரூபாய் இலக்கினை 5 ஆண்டுகளில் எட்ட முடியும். மாத மாதம் 55750 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் 15% என வைத்துக் கொண்டால் உங்களால் 49,99,754 ரூபாய் கார்ப்பஸினை எட்ட முடியும்.
எந்த பண்டில் முதலீடு?
இதே ஹெச் டி எஃப் சி பிளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா மிட்கேட் மல்டிகேப் பண்டுகள் முறையே, 19.40% மற்றும் 15.90% அளவுக்கு நடப்பு ஆண்டில் வருமானம் கொடுத்துள்ளது. இது கடந்த ஆண்டு 2.59% மற்றும் 5.91% அளவுக்கு வருமானம் கொடுத்துள்ளது. இதுபோன்ற பண்டுகளில் உங்களது முதலீட்டினை செய்தால் உங்களது இலக்கினை எளிதில் பெற முடியும்.


Click it and Unblock the Notifications