சம்பளத்திற்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம் என்பது ஒரு காலத்தில் எட்டா கனியாக இருந்தது. ஆனால் தற்போது பணம் சம்பாதிக்கவும், பல வழிகள் இருக்கிறது, தாண்டி இந்திய வீடுகளில் பிடித்ததை செய்ய தற்போது சுதந்திரம் அதிகமாக கிடைக்கிறது. இதனால் விருப்பத்திற்கு ஏற்ப பணிகளையும், இடத்தையும் மாற்றிக்கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்திலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் ஒருவர் எந்த வயதில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதை ஏயோஸ் லேப்ஸ், சீன்ஸ் மற்றும் அவலான் லேப்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் வருண் மாயா சமீபத்தில் ஒரு வீடியோவில் மிகச் சுவாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்தார்.

"நீங்கள் உங்கள் நிறுவனத்தில் 500 ஊழியர்களை நியமித்திருக்கிறீர்கள். இப்படியிருக்கும் போது உங்களுடைய அனுபவத்தில் ஒருவர் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?" என்று கேட்கப்பட்டது. இதற்கு வருண் எண்களை மட்டும் கொடுக்காமல் இன்றைய வேகமாக மாறும் தொழில்நுட்ப உலகில் வேலை, கற்றல், ரிஸ்க், பணம் ஆகியவற்றை எப்படி பார்க்க வேண்டும் என்றும் விளக்கினார். இது இன்றைய இளம் தலைமுறையினர், பட்டாதாரிகளுக்கு பெரிய அளவில் உதவும்.
17 முதல் 19 வயது வரை பணத்தை இலக்கு வைக்க வேண்டாம் என்று வருண் திட்டவட்டமாக கூறுகிறார். இந்த காலகட்டம் சுய அறிதல் அதாவது self discovery-க்கானது. நீங்கள் யார், என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விரும்பாத வேலையில் சிக்கிக்கொள்வது ஆரம்ப காலத்திலேயே மிகப்பெரிய தவறு. இளம் வயதில் தானும் பல்வேறு விஷயங்களை முயன்று பார்த்ததாக கூறினார் வருண் மாயா, இந்த வயதில் சம்பாதிப்பதை விட கற்றல் முக்கியம்.
19 முதல் 21 வயது வரையிலான காலத்தில் சிறிய பணியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். பெரும்பாலானோர் இந்த வயதில் வேலைக்கு செல்கின்றனர். இங்கு ஒரு பெரிய டிராப் உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு VFX கலைஞர் 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் இருக்கும் வயர் க்ளீனிங் மட்டும் செய்து வந்ததை உதாரணமாகக் வருண் கூறினார். இப்போது ஆட்டோமேஷன் கருவிகள் அதை எளிதாக செய்துவிடுகின்றன. எனவே இந்த வயதில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை விட உயர்தரமான, வெற்றிகரமான மக்களுடன் பணியாற்ற வேண்டும். இன்டர்ன்ஷிப் மூலம் அவர்களிடம் அதிகளவில் கற்றுக்கொள்வது மூலம் உங்கள் கரியர் வளர்ச்சியில் பல ஆண்டுகளை மிச்சப்படுத்தும்.
21 முதல் 23 வயது வரை வாழ்க்கைக்கு தேவையான செலவுகள் தொடங்கும் - வாடகை, குடும்ப செலவுகள், அன்றாட செலவுகள். இதற்கு போதுமான சம்பளம் தேவை. இந்திய பெருநகரங்களில் மாதம் 50,000 முதல் 1 லட்சம் வரை போதுமானது என்று வருண் கூறுகிறார். ஆனால் இக்காலக்கட்டத்தில் புதிதாக கற்றுக்கொள்வதற்கான நேரத்தை இழக்கும் அளவுக்கு அதிக சம்பளத்தை துரத்த வேண்டாம். அது பின்னாளில் கரியர் வளர்ச்சியை பாதிக்கும் என வருண் கூறுகிறார்.
23 முதல் 25 வயது வரையிலாக காலக்கட்டத்தில் வருமானத்தை விட மதிப்பை உருவாக்க வேண்டும். உங்களுடைய திறன்கள் இப்போது மதிப்பு பெறத் தொடங்கும். நெட்வொர்க்கிங், துறை அறிவு, தனித்துவமான பார்வை ஆகியவை சம்பளத்தை விட முக்கியமாக இருக்க வேண்டும். மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெறுவது சிறப்பான நிலை. இக்காலக்கட்டத்தில் நீங்கள் தொழில்துறையில் தனித்து நிற்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
25 முதல் 27 வயது வரையிலான காலக்கட்டத்தில், கணக்கிட்ட ரிஸ்க் (calculated risk ) எடுக்க வேண்டும் என்று வருண் கூறுகிறார். இந்த வயதில் தற்போது செய்யும் வேலையை விடுத்து குறைந்த சம்பளத்துக்கு ஸ்டார்ட்அப் அல்லது சொந்த தொழில் தொடங்கலாம் என அறிவுறுத்துகிறார். குறுகிய கால சம்பளத்தை நீண்டகால லாபத்துக்கு மாற்றுவது இங்கு நடக்கிறது. எடுத்த ரிஸ்க் எதிர்கால வருமானத்தை 2x, 3x அல்லது 10x ஆக பெருக்க வேண்டும்.
27 முதல் 30 வயது வரை முந்தைய ரிஸ்க்குகள் பலன் தர வேண்டும். சம்பளம் இரட்டிப்பாகவோ மூன்று மடங்காகவோ இருக்க வேண்டும். பெருநகரங்களில் மாதம் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பளம் பெறுவது சிறப்பான நிலை. நீங்கள் எடுத்த ரிஸ்க் வேலை செய்யவில்லை என்றால் உங்களின் நம்பகத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை ஆழமாக புரிந்துகொண்டால் CEO அருகில் முடிவெடுக்கும் பதவிக்கு உயரலாம்.
30 வயதுக்கு மேல் நம்பிக்கை பணத்தை விட மதிப்பு வாய்ந்தது. இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் தொடங்குவது கடினம்.
ஆனால் வருண் 29 வயதில் ஏயோஸ் தொடங்கினார், தோல்விக்கு தயாராக இருந்தார். இந்த கட்டத்தில் உங்கள் பெயர், நம்பகத்தன்மை, உறவுகள் ஆகியவை தான் முக்கியம். இந்த நம்பிக்கை தலைமை பதவி, கூட்டு முயற்சி, நீண்டகால வெற்றிக்கு வழிவகுக்கும்.
சாதாரண மக்களுக்கு வருண் மாயாவின் இந்த அறிவுரை ஒரு வழிகாட்டி. வயது வரிசையில் இதில் குறிப்பிட்டட சம்பளத்தை பெறுவது மட்டும் இலக்காக இருக்கக் கூடாது. இக்காலக்கட்டத்தில் தொடர்ந்து புது விஷயங்களை கற்றுக்கொள்வது, ரிஸ்க் எடுப்பது, உங்கள் நிறுவனத்திலும் - உங்களுடைய நெட்வொர்கிலும் நம்பகத்தன்மை உருவாக்குவது தான் நீண்டகால வெற்றிக்கு அடித்தளம். இதை பாலோ செய்தாலே பின்னாளில் சம்பளம் தானாக உயரும். இன்றைய தொழில்நுட்ப உலகில் இத்தகைய சிந்தனை மிகவும் அவசியம்.
More From GoodReturns

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?



Click it and Unblock the Notifications