பிபிஎஃப் திட்டத்தில் ரூ.1 கோடி பெற எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்ய வேண்டும்..!

இன்றைய காலகட்டத்தில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பாதுகாப்பு உண்டு. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அப்படியிருக்கையில் இதி ஆச்சரியம் ஏதும் இல்லை எனலாம்.

நிறைய சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும்? அதன் மூலம் குழந்தைகளின் வருங்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக லாபம் ஓரளவு அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் எதில் சேமிக்கலாம், எது பாதுகாப்பானது? எது லாபகரமானது? என்பதில் தான் குழப்பமே. இது தான் பலருக்கும் பிரச்சனையே.

ஆக அந்த வகையில் எளிதில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை பெற, அரசின் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். அதெல்லாம் சரி, 15 வருடம் கழித்து எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், வாருங்கள் பார்க்கலாம்.

அரசின் பொது வருங்கால வைப்பு நிதி

அரசின் பொது வருங்கால வைப்பு நிதி

அரசின் திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. இதனை விட வேறு என்ன வேண்டும்?

15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?

15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?

அதெல்லாம் சரி இன்று நாம் பார்க்கவிருப்பது இந்த திட்டத்தில், எனக்கு 15 வருடம் கழித்து 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருடம் தொடரலாம் என்பதால், இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

அரசின் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (பைசாபஜார் கால்குலேட்டர் அடிப்படையில் எடுக்கப்பட்டது) மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,08,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதனை 30 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 1,11,24,655 ரூபாய் உங்கள் கைக்கு கிடைக்கும்.

மொத்த முதலீடு எவ்வளவு?

மொத்த முதலீடு எவ்வளவு?

ஆக 7.1% வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யும்போது 1 வருட முடிவில், உங்களது கணக்கில் 1,15,668 ரூபாயாக இருக்கும். இதே இண்டாவது ஆண்டின் முடிவில் உங்களது கணக்கில் 2,39,548 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 30 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி செய்யும் பட்சத்தில் 32,40,000 ரூபாய் முதலீடு செய்திரூப்பீர்கள். வட்டியுடன் சேர்த்து 11,124,655 ரூபாயாக உங்களது தொகை இருக்கும்.

இவ்வளவு தான் செய்ய முடியும்?

இவ்வளவு தான் செய்ய முடியும்?

எனினும் இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் 15 ஆண்டுகள் தான். ஆக ஒரு திட்டத்தின் மூலம் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அப்படி அதிகபட்ச தொகையான இதே 1,50,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் கூட, 15 வருடத்தில் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களுக்கு வட்டி மட்டும் 18,18,208 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தத்தில் உங்களது முதிர்வு தொகையாக 40,68,208 ரூபாய் உங்களது கைக்கு 15 வருடம் கழித்து கிடைக்கும். ஆக உங்களுக்கு நிச்சயம் பெரிய தொகை தேவை எனில் உங்கள் கணவர் அல்லது மனைவி பெயரில் தொடங்கிக் கொள்ளலாம். ஆக அதன் மூலம் ஓரளவுக்கு நீங்கள் நினைத்த தொகையினை பெற முடியும்.

குழந்தைகள் பெயரில் தொடங்கலாம்?

குழந்தைகள் பெயரில் தொடங்கலாம்?

இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும்.

குறைந்தபட்சம் எவ்வளவு பங்களிப்பு?

குறைந்தபட்சம் எவ்வளவு பங்களிப்பு?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?

எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.

இடையில் பணம் எடுக்கலாமா?

இடையில் பணம் எடுக்கலாமா?

உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். உதாரணத்திற்கு ஜனவரி 1, 2012ல் தொடங்கியிருந்தால் 2018 -19ம் நிதியாண்டில் இருந்து திரும்ப பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?

முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?

இந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+