SIP: ரூ.1 கோடி இலக்கு.. 10, 15 மற்றும் 20 ஆண்டுகளில் பெற எவ்வளவு முதலீடு செய்யணும்?

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், முதலீட்டு ஆலோசகர் தரப்பில் பரிந்துரை செய்யப்படும் திட்டங்களில் பெரிதும் இருப்பது மியூச்சுவல் பண்டுகள் தான்.

மியூச்சுவல் பண்ட்ஸ் என்பது இல்லாத போர்ட்போலியோக்களே இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக நீண்டகால நோக்கில், மிகப்பெரிய கார்பஸ் இலக்குகளை அடைய ஏதுவான திட்டங்களாக பார்க்கப்படுவது மியூச்சுவல் பண்டுகள் தான்.

சிறந்த முதலீட்டு ஆப்சன்

சிறந்த முதலீட்டு ஆப்சன்

இது பங்கு சந்தை உள்ளிட்ட மற்ற ரிஸ்கான முதலீடுகளை காட்டிலும் சிறந்த ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக எஸ்.ஐ.பி முதலீடானது சிறந்ததொரு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்பஸ் இலக்குகளை அடைய வேண்டுமெனில் இது சிறந்ததொரு ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

2 முக்கிய விஷயங்கள்

2 முக்கிய விஷயங்கள்

மியூச்சுவல் பண்டுகளை பொறுத்த வரையில் இரண்டு சிறந்த ஆப்சன்கள் உள்ளன. ஒன்று மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க முடியும். இரண்டாவது குறைந்த தொகையில் இருந்து கூட எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்து கொள்ளலாம்.

எனினும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு அதனை கவனமுடன், அதனை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

இளமையிலேயே தொடங்கணும்

இளமையிலேயே தொடங்கணும்

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்.ஐ.பி முறையில் 1 கோடி ரூபாயினை அடைய, 10, 15 மற்றும் 20 ஆண்டுகள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றித் தான்.

பொதுவாக முதலீடு என்றாலே அதனை இளமை காலத்தில் இருந்து தொடங்குவது தான். அப்போது தான் குறைந்த தொகையினை முதலீடு செய்தாலும், மிகப்பெரிய கார்பஸ் இலக்கினை எளிதாக அடைய முடியும்.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

எஸ் ஐ பி மூலமாக 1 கோடி ரூபாய் கார்பஸ் இலக்கினை அடைய 10 ஆண்டுகள் எனில் மாதம் 40,040 ரூபாயினை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதே 15 ஆண்டுகள் எனில் 19,819 ரூபாய் செய்ய வேண்டி இருக்கும். இதே 20 ஆண்டுகள் எனில் 10,009 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இது CAGR என்பது 12% ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

 10% வருமானம் எனில்

10% வருமானம் எனில்

எஸ் ஐ பி-யில் CAGR 10% ஆக கணக்கிட்டால், 10 ஆண்டுகள் என எடுத்துக் கொண்டால், 48,414 ரூபாயாகவும், 15 ஆண்டுகள் 23,928 ரூபாயாகவும், 20 ஆண்டுகளில் 13,060 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

எஸ் ஐ பி-யில் CAGR 15% ஆக கணக்கிட்டால், 10 ஆண்டுகள் என எடுத்துக் கொண்டால், 35,886 ரூபாயாகவும், 15 ஆண்டுகள் 14,774 ரூபாயாகவும், 20 ஆண்டுகளில் 6,597 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+