Mutual Funds: முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் பார்க்க வேண்டுமெனில், நிபுணர்கள் பொதுவாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய பரிந்துரை செய்கின்றனர். இதுவே நீண்டகால நோக்கில் அவர்களின் இலக்கினை அடைய பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பொதுவாக நிதியினை வசூல் செய்து பல்வேறு துறைகளில் பிரித்து துறை வாரியாக முதலீடு செய்கின்றன.
குறிப்பாக பங்குகள், பத்திரங்கள், மற்ற முக்கிய திட்டங்கள் என பலவற்றிலும் கவனம் செலுத்துகின்றன.
குறைந்த அளவில் முதலீடு செய்யலாம்
இதில் கட்டணம் என்பதும் குறைந்தபட்ச தொகையாகவே வசூலிக்கப்படுகின்றது. இதில் கடன் சந்தை மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. அதேபோல இந்த திட்டத்திலும் மாதம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ள முடியும் என்பதால், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
இலக்கு இது தான்?
குறிப்பாக மிகப்பெரிய கார்பஸ் இலக்குகளை அடைய இது பயனுள்ள ஒன்றாக நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவருக்கு 10 ஆண்டுகள் கழித்து 1 கோடி ரூபாய் கார்ப்பஸ் வேண்டும் என வைத்துக் கொள்வோம். அப்படி எனில் அவர் எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபி மூலம் இந்த இலக்கினை அடைய முடியுமா? இது சாத்தியமானதா? அப்படி எனில் எதில் முதலீடு செய்யலாம்.
எவ்வளவு முதலீடு?
நீங்கள் 10 ஆண்டுகள் கழித்து 1 கோடி ரூபாய் இலக்கினை அடைய எஸ்ஐபி மூலம் , மாதம் 43,500 ரூபாய் முதலீடு செய்து கொள்வோம். அப்படி இல்லையெனில் ஆரம்பத்தில் 32000 முதலீட்டினை செய்யத் தொடங்கி படிப்படியாக 10% முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். இதே மொத்தமாக முதலீடு செய்யும்பட்சத்தில் முதலீட்டாளர் 32,20,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
எவ்வளவு வருமானம் வேண்டும்?
எஸ்ஐபி அல்லது லம்ப்சம் தொகையாக முதலீடு செய்தாலும், உங்களுக்கு ஆண்டுக்கு 12% லாபம் வருமானம் தேவைப்படும். அப்படி கிடைத்தால் மட்டுமே அது உங்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
அந்த வகையில் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ப்ளூசிப் பண்ட் (ICICI Prudential Bluechip Fund), எஸ்பிஐ லார்ஜ் & மிட்கேப் க்ரோத் , மிரே அசெட் மிட்கேப் பண்ட், ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் பண்ட் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
நல்ல லாபம் கொடுக்கலாம்
10 ஆண்டுகள் என்பது நீண்டகாலமாக இருப்பதால் நீங்கள் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் என்பது நல்ல லாபம் கொடுக்கலாம் என்பதால் அதனை பரிசீலிக்கலாம். எனினும் தகுதிவாய்ந்த முதலீட்டு ஆலோசகர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்யலாம். முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications