சிறு துளி பெரு வெள்ளம் - இது வெறும் பழமொழி அல்ல, பணக்காரர்களாக விரும்புபவர்களுக்கான தாரக மந்திரம். இன்று நாம் நண்பர்களுடன் சேர்ந்து டீ குடிக்கவோ அல்லது தேவையில்லாத தின்பண்டங்கள் வாங்கவோ சாதாரணமாக செலவு செய்யும் தொகைதான் 50 ரூபாய். ஆனால் அதே 50 ரூபாயை ஒரு நாளைக்கு சேமிக்கத் தொடங்கினால், அது 5 ஆண்டுகளில் மிகப்பெரிய தொகையாக வளர்ந்து நிற்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் எனப் பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு சேமிப்பு என்பது எட்டாக்கனி என்று தோன்றலாம். பலரும் பெரிய தொகையை சேமிக்க வேண்டும் என்று காத்திருந்து, கடைசியில் எதையுமே சேமிக்காமல் விட்டுவிடுகிறோம். உங்கள் அன்றாட செலவில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து பாருங்கள்.

சிறிய தூரத்திற்கு செல்ல பைக்கில் செல்வதை தவிர்த்து நடப்பதோ அல்லது தேவையற்ற டீ, காபி செலவை குறைப்பதோ உங்கள் பாக்கெட்டில் ஒரு பெரிய நிதியத்தை உருவாக்கும்.
ஒரு நாளைக்கு வெறும் 50 ரூபாயை நீங்கள் ஒதுக்கி வைத்தாலே, ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 18,250 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 91,250 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த 1,500 ரூபாய் தொகையை வெறும் சேமிப்பாக வைக்காமல், சரியான இடத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் இன்னும் அதிகம். இதை வங்கி தொடர் வைப்பு நிதி (RD)யில் போட்டால் 6-7% வட்டி கிடைத்தால், 5 ஆண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1.08 லட்சம் ரூபாய் இருக்கும். இதே கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் சராசரியாக 12% லாபம் தந்துள்ளதை கணக்கிட்டால், உங்கள் பணம் 1.24 லட்சம் ரூபாயாக ஆக வளர்ந்திருக்கும். இதுவே மியூச்சுவல் ஃபண்ட் (SIP) மூலம் நீங்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, சராசரியாக 15% லாபம் கிடைத்தால், மொத்தம் உங்கள் கையில் 1.31 லட்சம் ரூபாய் இருக்கும்.
என் சம்பளமே வெறும் 15,000 ரூபாய் தான், இதில் நான் எப்படி சேமிப்பது என்று கேட்கலாம். சேமிப்பு என்பது அதிக வருமானம் இருப்பவர்களுக்கானது மட்டுமல்ல. எவ்வளவு சம்பாதித்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே நிதி சுதந்திரம் பெறுகிறார்கள். மாறாக சம்பளம் ஏறிய பிறகு சேமிக்கலாம் என்று காத்திருப்பவர்கள் ஒருபோதும் சேமிப்பதில்லை.
நீங்கள் ஒவ்வொரு நாளும் 50 ரூபாய் எடுத்து வைப்பது கடினமாக இருந்தால், உங்கள் சம்பளம் வந்தவுடனேயே 1,500 ரூபாயை தானாகவே வேறொரு கணக்கிற்கோ அல்லது SIP-க்கோ மாறும்படி செய்துவிடுங்கள். இன்று நீங்கள் ஒதுக்கி வைக்கும் இந்த சிறு தொகை, நாளை ஒரு இக்கட்டான நேரத்தில் உங்கள் குடும்பத்தைக் காக்கும் பெரும் நிதியாக மாறும். 50 ரூபாய் தானே என சாதாரணமாக நினைக்காதீர்கள். அது உங்கள் எதிர்காலத்தின் பெரிய முதலீடாக கூட இருக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications
