சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் எதில் முதலீடு செய்யலாம், எது பாதுகாப்பானது? எது லாபகரமானது? என்பதில் தான் பிரச்சனையே.
அதிலும் முதுமை காலத்திற்கான முதலீடு எனும் போது ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து முதலீடு செய்வது நல்லது?
அந்த வகையில் அரசின் ஒரு பாதுகாப்பான திட்டம், கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு என்றால், மறுக்கவா முடியும். அப்படிப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை பற்றித் தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி
ஓய்வு காலத்திற்காக சேமிக்க நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது 15 வருட திட்டம் என்பதால், நாம் நன்றாக இருக்கும்போதே முதலீடு செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?
அதெல்லாம் சரி, இந்த திட்டத்தில் நான் வருடத்திற்கு 1,000 ரூபாய் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு 15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும் என்பது தான் இன்றைய கேள்வியே?
முதல் வருடம் 1000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1%. இதன்படி 1000 ரூபாய்க்கு உங்களுக்கு 71 ரூபாய் வட்டி கிடைக்கும். ஆக ஒரு வருட முடிவில் 1071 உங்களிடம் இருக்கும்.
ஆக இரண்டாவது ஆண்டில் முந்தைய ஆண்டின் 1071 + இரண்டாம் ஆண்டின் தொகை 1000 ரூபாயினை சேர்த்து, வட்டியை கணக்கிட்டால் 2218 ரூபாய் உங்கள் வசம் இருக்கும்.
இப்படியே தொடர்ந்து 15 வருடம் முதலீடு செய்யும்போது உங்கள் வசம் வட்டியுடன் சேர்த்து 27,121 ரூபாய் இருக்கும். மொத்தத்தில் வட்டியாக உங்களிடத்தில் 12,121 ரூபாய் இருக்கும்.
பெரிய அளவில் முதலீடு செய்தால் லாபம் தான்?
இதே நீங்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், 15 வருடத்திற்கு வட்டியாக 1,21,215 ரூபாயும்+ அசல் 1,50,000 ரூபாயும் சேர்த்தால் உங்கள் வசம் 2,71,215 ரூபாய் கிடைக்கும்.
இதே நீங்கள் வருடத்திற்கு 1,50,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால், 15 வருடத்தில் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களுக்கு வட்டி மட்டும் 18,18,208 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தத்தில் உங்களது முதிர்வு தொகையாக 40,68,208 ரூபாய் உங்களது கைக்கு 15 வருடம் கழித்து கிடைக்கும்.
அதெல்லாம் சரி இந்த கணக்கினை யாரெல்லாம் தொடங்கிக் கொள்ளலாம்? மற்ற விவரங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்?
யார் தகுதியானவர்?
இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ, இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும். அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
எங்கு இந்த கணக்கினை தொடங்கலாம்?
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இதனை உங்களது வங்கி நெட் பேங்கிங்கிலும் கூட தொடங்கிக் கொள்ளலாம்.
இடையில் பணம் எடுக்க முடியாதா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ தக்க பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications