இந்தியர்கள் மத்தியில் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்துள்ளனர்.
எஸ்ஐபி என்பது systematic investment fund என்பதன் சுருக்கமாகும். அதாவது முறையாக திட்டமிடப்பட்ட முதலீடு. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவது தான் எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. இதனை மாதந்தோறும், காலாண்டு தோறும் அல்லது ஆண்டுதோறும் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம் . எஸ்ஐபி முதலீடுகளை பொருத்தவரை சிறு தொகையிலிருந்து நம்மால் தொடங்க முடியும், சில மியூச்சுவல் பண்டு திட்டங்களில் நாம் 100 ரூபாயிலிருந்து கூட முதலீடு செய்ய முடியும் .

எனவேதான் எஸ்ஐபி முதலீடுகள் இந்தியாவில் புகழ்பெற்றவையாக மாறி இருக்கின்றன. ஏனெனில் அனைத்து தரப்பு மக்களும் முதலீடு செய்யும் வகையில் இது வசதி கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையில் நாம் மாதம் தோறும் 10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீடு செய்பவர்களால் 1 கோடி ரூபாயை நிதி தொகுப்பாக பெற முடியுமா முடியும், ஆம் என்றால் அதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம் .
நாம் மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்கிறோம் அந்த முதலீட்டு திட்டம் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தருகிறது என வைத்து கொள்வோம்.
10 ஆண்டுகளில் முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கும்?: 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் செய்த மொத்த முதலீடு 12 லட்சம், உங்களுக்கு கிடைத்த லாபம் 10.40 லட்சம். எனவே 10 ஆண்டுகள் முடிவில் உங்கள் கணக்கில் 22.40 லட்சம் ரூபாய் இருக்கும்.
15 ஆண்டுகளில் முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கும்?:15 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் செய்த மொத்த முதலீடு 18 லட்சம், உங்களுக்கு கிடைத்த லாபம் 29.59 லட்சம். எனவே 15 ஆண்டுகள் முடிவில் உங்கள் கணக்கில் 47.59 லட்சம் ரூபாய் இருக்கும்.
20 ஆண்டுகளில் முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கும்?: 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் செய்த மொத்த முதலீடு 24 லட்சம், உங்களுக்கு கிடைத்த லாபம் 67.98 லட்சம். எனவே 20 ஆண்டுகள் முடிவில் உங்கள் கணக்கில் 91.98 லட்சம் ரூபாய் இருக்கும்.
ரூ1 கோடிக்கு எத்தனை ஆண்டுகள் தேவை: 21 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் செய்த மொத்த முதலீடு 25.20 லட்சம், உங்களுக்கு கிடைத்த லாபம் 79.10 லட்சம். எனவே 21 ஆண்டுகள் முடிவில் உங்கள் கணக்கில் 1.04 கோடி ரூபாய் இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications