பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் "சுகன்யா சம்ரித்தி யோஜனா" என்ற திட்டம். இந்தத் திட்டத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து முதலீடு செய்வதன் மூலம் குழந்தைக்கு 21 வயதானவுடன் அசலும் வட்டியுமாக சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை "செல்வமகள் சேமிப்புத் திட்டம்" என்றும் கூறுவர். இந்தத் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) என்றால் என்ன?: SSY என்பது பெண் குழந்தையின் நலனுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். பலருக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற பெயரை விட செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொன்னால்தான் புரியும். இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு உள்ளது.

தகுதி: SSY திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட முதலீட்டு திட்டமாகும். SSY திட்டத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களை பார்வையிடலாம்.
குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை SSY திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். முன்னர் இந்த குறைந்தபட்ச தொகை 500 ரூபாயாக இருந்தது. தற்போது சாமானிய மக்களும் SSY திட்டத்தில் பயன்பெறும் வகையில் அரசாங்கம் குறைந்தபட்ச தொகையை 250 ரூபாயாக குறைத்துள்ளது.
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். SSY கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
SSY கணக்கை யார் திறக்கலாம்?: கணக்கு தொடங்கும் தேதியின்படி 10 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு, அவர்களுடைய பாதுகாவலர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்குகளைத் திறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு குடும்பத்தில் எத்தனை SSY கணக்குகளை திறக்க முடியும்?: SBI இணையதளத்தின்படி, இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம்.
15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து 1.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: SSY திட்டத்தின் மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால் உங்களுடைய முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், முதிர்வு காலம் 21 ஆண்டுகள். அதாவது கடைசி 6 ஆண்டுகளுக்கு நீங்கள் எந்தவித தொகையும் செலுத்தாமலேயே, உங்களுக்கு வட்டி கிடைக்கும்.
உதாரணமாக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 15 ஆண்டுகளுக்கு உங்களுடைய மொத்த முதலீடு 22,50,000 ரூபாயாக இருக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பெரும் கூட்டு வட்டி சுமார் 46,82,648 ரூபாயாக இருக்கும்.
அடுத்த 6 ஆண்டுகள் நீங்கள் எந்த தொகையும் செலுத்தாமல் இருந்தாலும் உங்கள் முதலீட்டுக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும். இந்த 6 ஆண்டுகளில் மட்டும் உங்களுடைய வட்டி சுமார் 26,12,132.26 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக 69,32,648 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்


Click it and Unblock the Notifications