இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 4,5 மற்றும் 6 ஆகிய மூன்று நாட்களுக்கு நிதி கொள்கை குழு கூட்டத்தை மும்பையில் நடத்தியது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து ரெப்போ வட்டி விகிதம் ,நாட்டின் பண வீக்கம், பொருளாதார வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அவர் அறிவித்தார். கடந்த 2025 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை ஒரு சதவீதம் வரை குறைத்திருக்கிறது. இதன் மூலம் வங்கிகளின் நம் வாங்கி இருக்கக்கூடிய கடன்களுக்கான வட்டியும் குறை இருக்கிறது.

ரெப்போ வட்டி என்றால் என்ன: பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்படக்கூடிய வணிக ரீதியிலான வங்கிகளுக்கு கடன் வழங்கும். அந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி வட்டியை தான் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கிறோம். எனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது வங்கிகள் தானாகவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை குறைக்கும்.
ரூ.50 லட்சம் வீட்டு கடன் வாங்கியவரின் இஎம்ஐ: ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட 0.50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பினால் வீட்டு கடன் வாங்கியவருக்கு எவ்வளவு இஎம்ஐ தொகை குறையும் , எவ்வளவு தொகை சேமிக்க முடியும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு ஒரு நபர் 50 லட்சம் ரூபாயை வீட்டு கடனாக வாங்கி இருக்கிறார். 20 ஆண்டு காலத்திற்கு அவர் தன்னுடைய கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதில் அவர் வாங்கிய கடனுக்கு ஆண்டுக்கு 8. 5% வட்டி விகிதமாக விதிக்கப்படுகிறது. இந்த நபர் இதுநாள் வரை மாதம் தோறும் 43,391 ரூபாய் இஎம்ஐ செலுத்தி வருகிறார். நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்திருக்கிறது. இதையே பின்பற்றி அவருக்கு கடன் வழங்கும் வங்கி வட்டியை குறைத்தால் அவர் கடனுக்கு செலுத்தும் வட்டி விகிதம் 8.5%இல் இருந்து 8% ஆக குறையும்.
இஎம்ஐ-இல் மாதம் ரூ1,500 சேமிக்கலாம்: இதன் மூலம் அவர் செலுத்தக்கூடிய மாதாந்திர இஎம்ஐ தொகை 41822 ரூபாய் என குறையும். அதாவது மாதம் தோறும் இந்த நபர் தன்னுடைய இஎம்ஐ தொகையில் சுமார் 1500 ரூபாயை சேமிக்க முடியும். கிரெடாய் செயலாளரான கௌரவ் குப்தா ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
ரெப்போ வட்டி விகித குறைப்பால் வீட்டு கடன் மட்டும் இல்லாமல் தனி நபர் கடன்கள், வாகன கடன்கள் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதங்களும் குறையும்.


Click it and Unblock the Notifications