வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி இந்தியா படு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் வேலையில் இந்திய நிதி சந்தைகள் பல வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் வசிப்பவரானாலும் சரி, வெளிநாட்டில் வசிப்பவரானாலும் சரி தங்கள் பொன்னான செல்வத்தை அதிகரிக்க பல வழிகள் இந்தியாவில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பு தான் மியூச்சுவல் ஃபண்டுகள்.
ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது? இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் கீழ் உள்ள அசட் அண்டர் மேனேஜ்மென்ட் (AUM) அதாவது மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத நிலவரப்படி மொத்தமாக நிர்வகிக்கப்படும் AUM மதிப்பு ரூ.64.53 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை பெரிதும் நம்புகின்றனர் என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் பல தனிப்பட்ட முதலீடாளர்கள் அதாவது பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீடாளர்கள் வரை தங்களுடைய சிறிய அல்லது பெரிய முதலீடுகளை ஒரு பொதுவான நிதியில் முதலீடு செய்கின்றனர். இது பிற்க்காலத்தில் அதிக வருமானத்தை வழங்குகிறது.
திரட்டப்படும் இந்த தொகையை நிதி மேலாளர்கள் ஒரே சொத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு வகையான பங்குகள் மற்றும் பத்திரங்களில் பிரித்து பிரித்து முதலீடு செய்கிறார். இவ்வாறு பல சொத்துக்களில் முதலீடு செய்யப்படுவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் அபாயத்தை குறைப்பதாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவில் நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது சற்று சிரமமாக இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உண்டு. நேரமின்மை, சந்தை பற்றிய புதிய தெளிவு இல்லாமல் இருப்பது, இந்திய சட்ட திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் முதலீடு செய்ய முடியாமல் போகலாம்.
இந்தியாவில் இல்லாமலேயே நிபுணர்களின் மூலம் இந்திய நிதி சந்தையில் NRI-கள் முதலீடு செய்ய முடியும். அனைத்து நிர்வாகப் பணிகளையும் நிதி மேலாளர்கள் கவனித்துக் கொள்வதால் என்ஆர்ஐ-கள் கவலைப்படத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை கருத்தில் கொள்ளலாம்.
முதலீட்டு பயணத்தை தொடங்குவதற்கு முன்பு NRI-கள், சில ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.
ஸ்டெப் 1: முதலில் KYC செயல்முறையை முடிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிகளின்படி கேஒய்சி செயல் முறையை முடிக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பு என்பது இந்திய நிதிச் சந்தையில் உள்ள அனைத்து புதிய முதலீட்டாளர்களுக்கும் கட்டாயம்.
கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட், பான் கார்டு, வெளிநாட்டு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை தேவைப்படலாம்
ஸ்டெப் 2: உங்களுடைய வங்கி கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக ஒரு இந்திய கணக்கு NRI-களுக்கு தேவை. NRE அல்லது NRO கணக்கு மூலம் முதலீடு செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கணக்கு வகையின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முதலீடு செய்யக்கூடிய என்ஆர்ஐ-கள் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம்.
ஸ்டெப் 3: முதலீடு செய்ய ஒரு தளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். கேஒய்சி செயல்முறை முடிந்து, நீங்கள் எந்த தளத்தில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
myCAMS, Kfintech, MF Central, BSE இன் BSE STAR MF, NSE இன் MFSS, NSE இன் NMF-II தளம், EOPகள். இந்த தளங்கள் உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுடைய முதலீடுகளை சரியாக நிர்வகிக்க உதவும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications