அமெரிக்க-ஈரான் இடையே நிலவும் மோதல் உலகளவில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு என சர்வதேச சந்தை தடுமாற்றத்தில் இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீட்டாளர்கள் பார்த்து பார்த்து முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட் இன் இந்தியா சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தரவுகளின் படி 2026-ஆம் ஆண்டின் மே மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலீட்டாளர்கள் ரூ.38,440 கோடியை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர். இந்த விகிதம் மே மாதத்தில் ரூ.22,907 கோடியாகக் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் என அனைத்து ஃபண்டுகளிலும் முதலீடு குறைந்துள்ளது.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படுகிற எஸ்ஐபி முதலீட்டாளர்களை ஏமாற்றியதில்லை. எனவே நம்மால் முடிந்த சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பணவீக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு ஒரு பெரிய தொகையை சேர்க்க முடியும். இந்தப் பதிவில் ஒருவர் ரூ.38 லட்சம் சேமிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம்.

ரூ.38 லட்சம் வருமானம் என்ற உடன் கண்டிப்பாக அதற்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். அப்படி இல்லை குறைந்தபட்ச முதலீட்டின் மூலமாகவே இது சாத்தியம்.
ரூ.38 லட்சம் வருமானம் பெறுவது எப்படி?: ஒரு முதலீட்டாளர் மாதம் ரூ.2,000 என்ற வீதத்தில் தொடர்ந்து முதலீடு செய்கிறார். அவருக்கு வருடாந்திர வட்டியாக 12 சதவீதம் வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு கூட்டு வட்டி கிடைக்கும். கூட்டு வட்டி என்றால் முதலில் நீங்கள் ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். அதற்கு வட்டி கிடைக்கும். மறுமுறை நீங்கள் முதலீடு செய்யும்போது ஏற்கனவே இருக்கும் முதலீடு மற்றும் வட்டியாகிய இரண்டிற்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இப்படி வட்டிக்கும் சேர்த்து வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும்.
இதனால் உங்களுடைய வருமானம் பன்மடங்காக உயரும். தொடர்ந்து ஒரு முதலீட்டாளர் மாதம் ரூ.2000 என்ற வீதத்தில் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதாவது 300 மாதங்கள். அப்படி செய்தால் 12 சதவீத வருடாந்திர வருமானத்தில் மொத்தமாக ரூ.6 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கும் வருமானம் ரூ.37.95 லட்சம் ஆக இருக்கும். தோராயமாக சொன்னால் ரூ.38 லட்சம் வருமானம். இதற்கு முக்கிய காரணமே கூட்டு வட்டி தான். இதனால்தான் வாரன் பஃபெட் மற்றும் சார்லி மங்கர் போன்ற உலகப் புகழ்பெற்ற முதலீட்டு ஜாம்பவான்கள் பொறுமையாக முதலீடு செய்தனர். காலம் செல்ல செல்ல கூட்டு வட்டியின் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்பதையே வலியுறுத்தினர்.
மேலே கூறப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. இப்படியும் முதலீடு செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதற்காகத்தான் இந்த பதிவு. எனவே நீங்கள் முதலீடு செய்ய ஆசைப்பட்டால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications