சென்னை: நடிகர் சரத்குமார், தேவயானி , சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் அண்மையில் 3BHK என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவதற்காக எப்படி எல்லாம் பாடுபடுகிறது என்பதை கதைக்களமாக கொண்ட படம் இது.
3BHK திரைப்படம்: இந்த திரைப்படத்தில் வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருப்பார் அவருடைய மனைவி சாந்தியாக தேவயானியும், மகன் பிரபுவாக சித்தார்த்தம் நடித்திருக்கின்றனர். ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.அப்பா, அம்மா அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் . அந்த குடும்பத்தில் அப்பா தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார். அந்த அப்பாவிற்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

சொந்த வீடு எனும் கனவு: சொந்த வீடு என்ற கனவுக்காக குடும்பமாக சேர்ந்து சிக்கனமாக செலவு செய்து பணத்தை சேமிக்க தொடங்குகிறார்கள். இருந்தாலும் வாழ்க்கையில் வரக்கூடிய அடுத்தடுத்த பிரச்சனைகள் அவர்களை சொந்தமாக வீடு வாங்க முடியாமல் தடுத்துவிடும். வாசுதேவன் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் சரத்குமார் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் பார்த்து பணத்தை சேமித்து வைப்பார். ஆனால் அந்த மொத்த பணத்துக்கும் எமனாக அவருக்கு ஹார்ட் அட்டேக் வந்துவிடும்.
மருத்துவ செலவு: திடீரென வாசுதேவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பார்கள். மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதால் அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுவார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு அந்த குடும்பம் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு சேமித்து வந்த பணம் முழுவதும் செலவாகிவிடும். இந்த திரைப்படத்தில் மட்டுமல்ல பெரும்பாலான இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களில் நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான் இது.

சேமிப்பை கரைக்கும் மருத்துவ செலவு: திடீரென ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகள் நம்மை மனரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடும் நெருக்கடிக்கு கொண்டு சென்று விட்டு விடும் .அந்த சமயத்தில் மருத்துவ செலவுகளுக்கு அனைத்து சேமிப்பு தொகையையும் செலவிட வேண்டி இருக்கும், தேவைப்பட்டால் நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது அல்லது தெரிந்தவர்களிடம் கடன வாங்குவது என மருத்துவ செலவுகள் நம்மை திக்கு முக்காட செய்து விடும். இதைதான் இந்த திரைப்படத்திலும் காட்டியிருப்பார்கள் .
திடீர் மருத்துவ செலவு: வாசுதேவன் மற்றும் குடும்பத்தினர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக இருந்து திட்டமிட்டு பணத்தை படிப்படியாக சேமித்து வருவார்கள், வாசுதேவன் ஓவர் டைம் வேலை பார்ப்பார் அவருடைய மனைவி தேவயானி வீட்டிலிருந்து முறுக்கு உள்ளிட்டவற்றை சுட்டு விற்பனை செய்வார். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு சேர்த்த பணமானது ஒரே மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவிடும்.
மருத்துவ காப்பீடு :இதன் காரணமாக அவர்கள் வீடு வாங்கும் கனவு தள்ளிப் போகும். இந்த இடத்தில் அவர்கள் ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுத்து இருந்தால் தன்னுடைய சேமிப்பு பணத்தை முழுமையாக மருத்துவ செலவுக்காக கொடுத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. இதற்காகத்தான் அனைவரும் மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் ,மருத்துவ காப்பீடு என்பது அத்தியாவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

அரசு வழங்கும் காப்பீடுகள்: இந்தியாவில் மருத்துவ செலவுகள் ஆண்டு தோறும் உயர்கின்றன, திடீரென ஒரு மருத்துவ செலவு ஏற்படும் போது நம்மால் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாது என்பதால்தான் மருத்துவ காப்பீடு எடுத்து வைப்பது நல்லது என சொல்லப்படுகிறது . இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகளே மருத்துவ காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.
எப்படி விண்ணப்பம் செய்வது: இதன்படி தகுதி வாய்ந்த குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். ரேசன் அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்பட்டு காப்பீடு வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டுக்கு 1,20,000க்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி படைத்தவை.
தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு: இந்த திட்டத்தில் சேர தகுதியான நபர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் குடும்ப வருமான சான்றிதழை பெற வேண்டும் , ரேசன் அட்டையின் அசல் மற்றும் நகல் , வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள கியோஸ்க் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும், இதனை அடுத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் காப்பீடுக்கான ஈ கார்டு வழங்கப்படும். இதனை கொண்டு நாம் மருத்துவ காப்பீடை பெறலாம்., தமிழ்நாட்டில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கூட மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மருத்துவ காப்பீடு அவசியம்: ஒரு வேளை இந்த திட்டத்தில் இணையக்கூடிய தகுதி எனக்கு இல்லை அதைவிட என்னுடைய வருமானம் அதிகமாக இருக்கிறது என கூறுபவர்கள் தனியாரிடம் மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுத்து வைப்பது நல்லது. இல்லையென்றால் திடீரென ஏற்படக்கூடிய மருத்துவ செலவு நம் சேமிப்பு ,நிம்மதி ,பல ஆண்டுகால உழைப்பு என அனைத்தையும் பறித்துச் சென்று விடும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications