இனி டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-மில் பணம் எடுக்கலாம்.. எந்தெந்த வங்கிகளில்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பல வங்கிகளும் கொண்டுள்ளன. இதன் மூலம் இனி 24 மணி நேரமும் எளிதில், மிக பாதுகாப்பாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த வசதியினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் கொண்டுள்ளன.

இதன் மூலம் இனி ஏடிஎம்களில் டெபிட் கார்டு இல்லாமலேயே டவுன்லோடு செய்து கொள்ளலாம். சரி வாருங்கள் எப்படி டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது என பார்ப்போம்.

 எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

எஸ்பிஐ-யின் யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் யோனோ கேஷ் என்பதை கிளிச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஏடிஎம் மையத்திற்கு சென்று நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இது நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லும். பயனர்கள் இதனை பயன்படுத்த கார்டுலெஸ் பரிவர்த்தனை ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியை பெற எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் தங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு போனில் எஸ்பிஐ யோனோ ஆப்பை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இந்த ஆப்பை பயன்படுத்தியே இந்த எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

எஸ்பிஐ யோனோ ஆப்-ல், தங்களது சுய மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவுசெய்து உள்நுழைந்து ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் உருவாக்க வேண்டும். இந்த ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தியோ அல்லது எஸ்பிஐ நெட்பேங்கைப் பயன்படுத்தியோ தான் யோனோ பயன்பாட்டில் உள்நுழைய முடியும். அதன்பிறகு, 6 இலக்க எம்.பி.ஐ.என் (MPIN) உருவாக்க வேண்டும்.

 

 ஐசிஐசிஐ வங்கியில் எப்படி எடுக்கலாம்?
 

ஐசிஐசிஐ வங்கியில் எப்படி எடுக்கலாம்?

ஐசிஐசிஐ வங்கியில் iMobile app மூலம் ஏடிஎம் இல்லாமல் நீங்கள் பணம் எடுக்க முடியும். இதற்காக நீங்கள் iMobile appபினை லாகின் செய்து, அதில் services என்ற ஆப்சனை தேர்வு செய்யவும், அதன் பிறகு ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தல் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் எவ்வளவு தொகை என்பதை கொடுத்து, உங்களது அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்யவும். பிறகு தற்காலிகமாக 4 இலக்க பாஸ்வேர்டினை கொடுத்து சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.

அதன் பிறகு அருகில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-களுக்கு செல்லவும். ஏடிஎம்மில் கார்டுலெஸ் கேஷ் விதிடிராவல் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களது மொபைல் நம்பர் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது மொபைல் எண், ஓடிபியை கொடுத்து, எவ்வளவு தொகை என்பதை கொடுத்து பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

 

 பேங்க் ஆப் பரோடாவில் எப்படி பணம் எடுப்பது?

பேங்க் ஆப் பரோடாவில் எப்படி பணம் எடுப்பது?

பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் M-connect Mobile Banking application என்ற ஆப்பினை லாகின் செய்து, கார்டுலெஸ் விதிடிராவலுக்காக ஓடிபியை ஜெனரேட் செய்து கொள்ளுங்கள். பிஓபியின் மொபைல் பேங்கிங்கினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் பிரீமியம் சர்வீசஸ் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து மொபைல் சேவையில் கேஷ் என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களது வங்கிக் கணக்கினை தேர்ந்தெடுத்து தொகையை உள்ளிட்டு சமர்பிக்கவும். இதனை சமர்பித்த பிறகு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி வரும். இந்த ஓடிபி 15 நிமிடங்களுக்கு செல்லும். அதற்குள் நீங்கள் ஏடி எம் சென்று பணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிஓடி ஏடிஎம் சென்று கேஷ் ஆன் யுவர் மொபைல் என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபியை உள்ளிடவும். அதன்பிறகு உங்களது தொகையை பதிவு செய்து பணத்தினை வித்டிரா செய்யலாம்.

 

 கோடக் மகேந்திரா வங்கியில் எப்படி?

கோடக் மகேந்திரா வங்கியில் எப்படி?

கோடக் மகேந்திரா வங்கி ஏடிஎம்மிலும் கார்டுலெஸ் வித்டிரா மூலம் பணம் எடுக்கலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் ஆப்பினை கிளிக் லாகின் செய்து பரிமாற்றம் செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் இதற்காக beneficiary's name, mobile number and address உள்ளிட்டவற்றை பதிவு செய்திருக்க வேண்டும். இது ஒரு முறை நிகழ்வு மட்டுமே. ஒரு முறை பதிவு செய்து கொண்டால் இந்தியா முழுவதும் உள்ள கோடக் மகேந்திரா வங்கி ஏடிஎம்களில் பணத்தினை கார்டு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

Beneficiary-யின் மொபைல் எண் மூலம் பணத்தினை வித்டிரா செய்து கொள்ள முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How SBI, ICICI, kotak Mahindra bank, Bob account holders can withdraw cash at ATMs without debit cards

Bank updates.. How SBI, ICICI, kotak Mahindra bank, Bob account holders can withdraw cash at ATMs without debit cards
Story first published: Tuesday, April 6, 2021, 0:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X