வயதாகும்போது நிதி நிலையை பராமரிக்க நம்பகமான வருமான ஆதாரத்தை உருவாக்குவது முக்கியம். அதற்கு பணியில் இருக்கும் போதில் இருந்து திட்டமிட வேண்டும். இதை உணர்ந்து இந்திய அரசு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்ற திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பின் பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை விரும்பும் குடிமக்களுக்கு SCSS திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தப் பதிவில் SCSS திட்டத்தின் மூலம் மாதம் 20,000 ரூபாய் வருமானம் பெறுவது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
SCSS திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள தனிநபர்கள் SCSS திட்டத்தில் முதலீடு செய்யலாம். இருப்பினும், 55 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்ட VRS பெற்ற தனிநபர்களும் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள். கூடுதலாக, பாதுகாப்புப் பணியாளர்கள் 50 வயது முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டு வரம்புகள்: SCSS திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டம் தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கணக்குகளை வழங்குகிறது. பல கணக்குகளை திறக்க முடியும் என்றாலும், அனைத்து கணக்குகளிலும் மொத்த முதலீடு ரூ.15 லட்சத்தை தாண்டக்கூடாது.
முதிர்வு காலம்: SCSS திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். விருப்பப்பட்டால் முதிர்ச்சி தேதிக்குப் பிறகும் 3 ஆண்டுகள் வரை இந்த கணக்கை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்: 2024-ஆம் ஆண்டில், SCSS திட்டத்திற்கு 8.2% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் முதல் வேலை நாளில் இதற்கான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மாதம் ரூ.20,000 சம்பாதிப்பது எப்படி?: SCSS திட்டத்தின் கீழ் மாத மாதம் 20,000 ரூபாயை பெற ஒரு தனிநபர் 30 லட்சத்தை மொத்தமாக SCSS திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 8.2% வட்டி விகிதத்தில் இந்த முதலீட்டுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 61,500 வழங்கப்படும். அப்படியானால் மாதம் தோறும் 20,000 ரூபாய் கிடைக்கும். ரூ.30 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்ய இயலாதவர்கள்.. உங்களுக்கு ஏற்ற தொகையை முதலீடு செய்து லாபம் பெறலாம். நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் தொகைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.
ஆண்டு வட்டி 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் TDS கழிக்கப்படும், SCSS வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகைகளை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தொகைக்கு வரி விலக்குகளைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications