பொதுவாக வங்கிகளில் கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை நாம் வழங்கினாலும் அவர்கள் நமது கிரெடிட் ஸ்கோர் அதாவது கடன் வாங்குபவரின் கடன் தகுதி அளவீடு எப்படி இருக்கிறது என்பதை கட்டாயம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, பாதுகாப்பற்ற தனிநபர் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் நபர், கிரெடிட் ஸ்கோர் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்று கடன் வழங்குபவர்கள் வலியுறுத்துகின்றனர். பலதரப்பட்ட வங்கிகள் கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக பல்வேறு அளவுகோல்களை கொண்டு இருக்கின்றன.

இருப்பினும், தனிநபர் கடன் வாங்குவதற்கு ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் 750 என்ற அளவில் இருந்தால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும். கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், கடன் வாங்குவது மட்டுமல்ல, கவர்ச்சிகரமான (குறைந்த) வட்டி விகித சலுகையை பெறுவதற்கும் பயன் அளிக்கும்.
எனவே கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதனை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க ஈசியான 5 விஷயங்களை நாம் செய்தாலே போதும். அந்த விஷயங்களை பார்ப்போம்..
மதிப்பெண்ணை கண்காணித்தல்: முதலாவது, உங்கள் கடன் அறிக்கையை நீங்கள் தொடர்ந்து கண்காணிப்து மிகவும் முக்கியம். குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் கடன் அறிக்கையை பார்க்க வேண்டும். முடிந்தால் அடிக்கடி கடன் நிலவரத்தை கண்காணித்து கொள்வது சிறப்பு.
திருத்தம்: உங்கள் கடன் அறிக்கையில் ஏதேனும் ஒழுங்கின்மையை கண்டறிந்தால், சிஆர்ஐஎஃப் ஹை ஸ்கோர் போன்ற கடன் தகவல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அதனை சரி செய்யலாம்.
கிரெடிட் கார்டு பில்கள்: உங்கள் கிரெடிட் கார்டு பில்களை விரைவில் செலுத்துங்கள். குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவோம் மீதியை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று தவறை செய்யாதீர்கள்.
குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம்: நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க, குறைந்த கடன் பயன்பாடு விகிதத்தை வைத்திருப்பது ஒரு வழியாகும். மொத்த கடனை கிடைக்கக்கூடிய கடனால் வகுப்பதை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் கடன் வரம்பு ரூ.10 லட்சமாக இருந்து, நீங்கள் ரூ.4 லட்சம் மட்டுமே கடன் எடுத்திருந்தால், உங்கள் கடன் பயன்பாடு விகிதம் 40 சதவீதமாக இருக்கும்.
பாதுகாப்பான கிரெடிட் கார்டு: உங்களுக்கு கடன் இல்லையென்றால் அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இல்லையென்றால் நீங்கள் ஒரு நல்ல பாதுகாப்பான கிரெடிட் கார்டை வாங்கலாம். இது கடன் வாங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது கிரெடிட் ஸ்கோரை உருவாக்க உதவுகிறது.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications