சிறுதுளி பெருவெள்ளம் என கூறப்படுவதுண்டு. எஸ்ஐபி முதலீடுகளுக்கு இது மிகச் சரியாக பொருந்தும் . எஸ்ஐபி முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் மாதம் தோறும் சிறுக சிறுக சேமித்து வந்தால் நீண்ட கால அடிப்படையில் நமக்கு அது பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி தரும் .
இந்தியாவில் தற்போது பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான ஒரு முதலீட்டு கருவியாக sip முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முறை மாறி இருக்கிறது . நாம் தொடர்ச்சியாக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மிக எளிதாக நம்முடைய நிதி இலக்கினை நம்மால் அடைய முடிகிறது.

அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கினை எட்டுவதற்கு ஒரு நபர் எவ்வளவு மாதம் தோறும் எஸ்ஐபி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம் . மிகச் சரியான ஒரு எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு அது எளிமையாக ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி விட உதவும்.
1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund
அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு நபர் ஒரு கோடி ரூபாயை மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டின் மூலம் சேர்க்க வேண்டும் என்றால் 10% லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். அவர் மாதம் 36 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது 12 ஆண்டுகள் முடிவில் அவர் கையில் 1 கோடி ரூபாய் இருக்கும் .
இதுவே இவருடைய எஸ்ஐபி முதலீடு ஆண்டுக்கு 11 சதவீத லாபம் தருகிறது என வைத்துக் கொண்டால் இவர் மாதம் 33, 500 ரூபாய் முதலீடு செய்தாலே போதும் 12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்று இலக்கை எட்டிவிடலாம் . இதுவே 12 சதவீத லாபம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்றால் இந்த நபர் மாதம் 31,250 ரூபாய் முதலீடு செய்தால் போதும். 12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை மிக எளிமையாக அடையலாம்.
சராசரியாக 30 லிருந்து 36 ஆயிரம் ரூபாய் வரை அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் கைகளுக்கு ஒரு கோடி ரூபாய் வந்துவிடும். வீட்டில் இரண்டு பேர் சம்பாதிக்கும் போது ஒரு சம்பளத்தை வீட்டின் தேவைகளுக்கும் ஒரு சம்பளத்தை முதலீடுகளுக்கும் என பிரித்து குறைந்தது 12 ஆண்டுகள் சிக்கனமாக இருந்து முதலீடு செய்தாலே நமக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துவிடும்.


Click it and Unblock the Notifications