ஆதார் கார்டு பயன்படுத்தி பர்சனல் லோன் வாங்குவது எப்படி..?

வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பான் கார்டு பெறுவதற்கு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒரு ஆவணமாக மாறியுள்ளது. அடையாளம் மற்றும் முகவரி சரிபார்க்கப்பட்ட சான்றாக, தனிநபர் கடன் விண்ணப்ப செயல்முறையை ஆதார் கார்டு எளிதாக்குகிறது. பல நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப தளங்கள் தற்போது ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பு மூலம் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.

இதனால், அவசரமான இக்கட்டான தருணங்கள், கல்வி அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக நிதியை விரைவாக பெற முடியும். இந்த வழிமுறையில் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக தடையற்ற பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது. அடையாளம் மற்றும் முகவரி ஆகிய இரண்டையும் சரிபார்ப்பதற்கான ஒரு முக்கியமான சரிபார்ப்பு கருவியாக ஆதார் உள்ளது.

ஆதார் கார்டு பயன்படுத்தி பர்சனல் லோன் வாங்குவது எப்படி..?

ரூ.10 லட்சம் வரை கடன் தேவைப்படுபவர்களுக்கு, ஆதார் அட்டையை பயன்படுத்துவது ஒரு தொந்தரவு இல்லாத, குறைந்த எழுத்து வேலை மற்றும் விரைவான நிதி உதவியை வழங்குகிறது. ஆதார் அடிப்படையிலான கடன்களுக்கு எந்தவிதமான பிணையமும் தேவையில்லை.

அடுத்து முகவரி சான்று மற்றும் அடையாள சான்று போன்ற பல ஆவணங்களின் தேவையை நீக்குவதன் மூலம் ஆவணப்படுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது. இந்த நெறிமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை கடன் ஒப்புதல்களை துரிதப்படுத்துகிறது. மேலும் கடன் வழங்கும் வழங்கும் செயல்முறையை விரைவாகவும் திறமையானதாகும் ஆக்குகிறது.

ஆதார் கார்டை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வரையிலான கடனை பெறுவது எப்படி என்பதை பார்ப்போம். முதல்ல. ஆதார் அடிப்படையிலான கடன் வாங்க உங்களிடம் பான் கார்டு இருப்பது அவசியம். கடந்த 3 முதல் 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கைகள், நீங்கள் சம்பளதாரராக இருந்தால் வருமான சான்று, சுயதொழில் செய்பவராக இருந்தால் வருமான வரி ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.

ஆதார் கார்டை பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள்

ஸ்டெப் 1: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை தொடங்க கடன் வழங்குபவரின் வெப்சைட்டை பாருங்க அல்லது அவர்களின் மொபைல் செயலியை டவுன்லோடு செய்து பார்க்க வேண்டும்.

ஸ்டெப் 2: கடனுக்கான உங்களது தகுதி அளவுகோல்களை சரிபாருங்க. இதற்கு கடன் வழங்குபவரின் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 3: சரிபார்ப்புக்காக உங்கள் ஆதார் கார்டுஷ, பான் கார்டு மற்றும் வருமானச் சான்றுகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4: ஓடிபி அடிப்படையிலான அங்கீகாரத்தை முடிக்க உங்கள் ஆதார் கார்டு உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 5: விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், கடன் வழங்குபவர் உங்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கும் வரை காத்திருக்கவும்.

ஸ்டெப் 6: உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், கடன் தொகை உங்கள் கணக்கில் வழக்கமாக 24 முதல் 48 மணி நேரத்திற்குள் செலுத்தப்படும்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+