எந்தவித பிணையமும் இல்லாமல் கடன் வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை 2015 ஏப்ரல் 8ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் முத்ரா திட்டத்தின்கீழ், ரூ.10 லட்சம் வரை பிணை இல்லாத கடனை வங்கிகள், கிராம வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன.
முத்ரா கடன் நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது. சிஷு (ரூ.50,000 வரை கடன்கள்), கிஷோர் (ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை) மற்றும் தருண் (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள்) மற்றும் தருண் பிளஸ் பிரிவின்கீழ் ரூ20 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படும். தருண் பிரிவின் கீழ் முந்தைய கடன்களை பெற்று வெற்றிகரமாக திருப்பி செலுத்திய தொழில்முனைவோருக்கு மட்டுமே தருண் பிளஸ் பிரிவின்கீழ் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்ரா கடன் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம். நீங்கள் வசிக்கும் பகுதியில் முத்ரா கடன் வழங்கும் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் கிளையை அணுக வேண்டும்.
வங்கியில் முத்ரா கடனுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை நிரப்ப வேண்டும்.
நிரப்பிய விண்ணப்பத்தை படிவத்துடன் தேவையான ஆவணங்களை (ஆதார் கார்டு, பான் கார்டு, தொழில் சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவை) இணைத்து கொடுக்க வேண்டும்.
முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்டெப் 1: அரசாங்கத்தின் ஜன் சமர்த் வலைதளத்துக்கு சென்று, ஸ்கீம் என்ற ட்ராப் டவுன் மெனுவில் இருந்து Business Activity Loan என்பதை கிளிக் செய்து, பிரதான் மந்தரி முத்ரா யோஜனா என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2:புதிய பக்கத்தின் கீழே ஸ்க்ரோல் செய்து Check Eligibility என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: நீங்கள் கைத்தறி நெசவாளர் அல்லது துப்பரவு பணியாளர் அல்லது தெருவோர வியாபாரியாக இல்லாவிட்டால் Other Business Loan என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 4:புதிய அல்லது ஏற்கனவே உள்ள வணிகம், வணிக வகை, உங்கள் சமூக வகை, இருப்பிடம், உங்கள் முயற்சியை தொடங்க அல்லது மேலும் வளர்ப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் உங்கள் சொந்த முதலீட்டு தொகை போன்ற விவரங்களை குறிப்பிடவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு உங்கள் தகுதிக்கான கடன் தொகையை போர்டல் கணக்கிட்டு காட்டும்.
ஸ்டெப் 6: மாதாந்திர இஎம்ஐ மற்றும் கடன் காலம் பற்றிய விவரங்களை பெற Calculate Eligibility என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 8: பிரைவசி பாலிசி பாலிசி, டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்கள் ஆகியவற்றை ஏற்று Next என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9: நீங்கள் வழங்கிய விவரங்களை மதிப்பாய்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 10: தேவையான ஆவணங்களை காட்டும் விண்ணப்பப் பக்கம் வரும். பான், Udayam பதிவு மற்றும் ஆதார் விவரங்களுடன் உங்கள் அடையாளத்தை சரிபார்த்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 11: போர்டல் உங்கள் GSTIN விவரங்களை பெறும். ஆனால் வணிகம் ஜிஎஸ்டி பதிவு செய்யப்படவில்லையென்றால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கு ஜிஎஸ்டி பொருந்துமா இல்லையா என்ற விவரத்தை என்டர் செய்யவும்
ஸ்டெப் 12: உங்கள் வணி விவரங்களை மற்றும் மாதந்திர விற்பனை விவரங்களை குறிப்பிட்டு Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 13: Verify என்பதை கிளிக் செய்து, அடுத்த பக்கத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை,வணிக முகவரி, ஏற்கனவே கடன் பெற்றுள்ளீர்களா என்ற விவரங்களை வழங்கவும்
ஸ்டெப் 14: உங்கள் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் போர்டல் பல்வேறு வங்கிகள் வழங்கும் கடன் சலுகைகள் மற்றும் வட்டி விகிதங்களை காட்டும்.
ஸ்டெப் 15: கடன் பெற Select Offer என்பதை கிளிக் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியால் உங்கள் கடன் விண்ணப்பம் டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்டு கடன் வழங்கப்படும்.
ஸ்டெப் 5: OTP உருவாக்கி பதிவு செயல் முறையை நிறைவு செய்ய வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications