எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா உங்களுக்கான செய்தி தான் இது..!

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் என்ற ஒன்று இருப்பதால் தான் நம்மில் பலரும் வங்கி பக்கம் செல்வதே இல்லை. சொல்லப்போனால் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் பணத்தினை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

ஏனெனில் தற்போது சிறு சிறு கிராமங்களிலும் கூட ஏடிஎம் சேவை உள்ளது. ஆக மக்கள் இதற்காக வங்கிகளுக்கு சென்று அலையாமல் ஏடிஎம்களுக்கு சென்று பணத்தினை எடுக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஏடிஎம்கள் தொலைந்து விட்டால் கூட, எப்படி பணம் எடுப்பது என வாடிக்கையாளர்கள் தவித்து போய்விடுகின்றனர். ஆனால் அந்த பதற்றத்தில் எப்படி கார்டுகளை பிளாக் செய்வது? புதிய கார்டுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று கவலைபடுகின்றனர்.

ஏடிஎம் – எப்படி?

ஏடிஎம் – எப்படி?

தொழில்நுட்பம் வளர வளர நாமும் நம்மை கொஞ்சம் அதற்கேற்ப மாற்றிக் கொள்வோமே. ஏனென்னில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ-யில் ஏடிஎம்மினை பிளாக் செய்யவோ அல்லது புதியதாக விண்ணப்பிக்கவோ எளிதான நடைமுறைகள் உள்ளன. சரி வாருங்கள் பார்க்கலாம். எப்படியெல்லாம் பிளாக் செய்யலாம். எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று.

எப்படி பிளாக் செய்வது?

எப்படி பிளாக் செய்வது?

உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 1,800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு டயல் செய்து, உங்களது ஏடிஎம் கார்டினை பிளாக் செய்யலாம். அதே போல மிக எளிதாக புதிய கார்டுக்கும் விண்ணபிக்கலாம். அதற்காக நீங்கள் 1800 425 3800 என்ற எண்ணை அழைக்கலாம்.

ஆன்லைனில் புதிய கார்டினை எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஆன்லைனில் புதிய கார்டினை எப்படி விண்ணப்பிக்கலாம்?

https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற இணையதளத்தில் சென்று லாக் ஆன் செய்து கொள்ளவும். அங்கு ATM card services என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அது ஒரு புதிய பக்கத்திற்கு செல்லும். அங்கு நீங்கள் Request ATM/Debit card என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும்.

பிறகு உங்களுக்கு ஏதுவான ஒரு பாஸ்வேர்டை கொடுத்து லாகின் செய்யவும். இப்படி கொடுத்தால் அந்த லிங்க் மற்றொரு பக்கத்தில் லாகின் ஆகும். அங்கு உங்களது பிரைமரி செகண்டரி கணக்குகள் வியூ ஆகும். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து, டெபிட் கார்டுக்கு விண்ணபிக்கலாம். அங்கு உங்களது டெபிட் கார்டில் வர வேண்டிய பெயர் சில ஆப்சன்களை கேட்கும்.

அதனை கொடுத்து விட்டு நிபந்தனைகளுக்கு ஒகே கொடுத்து சப்மிட் செய்யவும். இது மற்றொரு புதிய பக்கத்திற்கு செல்லும். அங்கு உங்களது அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அவை சரியானவை தானா என்பதனை சரிபார்த்து சப்மிட் செய்ய வேண்டும். நீங்கள் சப்மிட் செய்து முடித்து விட்டீர்கள் எனில் உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும். இதனை 7 - 8 வேலை நாட்களில் உங்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு கிடைத்து விடும்.

 

மொபைல் ஆஃப் மூலமும் விண்ணப்பிக்கலாம்

மொபைல் ஆஃப் மூலமும் விண்ணப்பிக்கலாம்

உங்களது sbicard mobile appப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் மெனு டேப்பினை கிளிக் செய்து, Service Request என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு Reissue/Replace Card என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்களது கார்டு நம்பரை தேர்வு செய்து பின்பு, சப்மிட் செய்யவும்.

கார்டை திரும்ப பெற கட்டணம் உண்டா?

கார்டை திரும்ப பெற கட்டணம் உண்டா?

நிச்சயம் கட்டணம் உண்டு. உங்களது பழைய கார்டுக்கு பதிலாக புதிய கார்டினை பெற 100 ரூபாய் கட்டணம் + வரியும் பெறப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்த பிறகு உங்களது புதிய கார்டு ஏழு - எட்டு வேலை நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். எனினும் உங்களது முகவரி இருப்பிடத்தினை பொறுத்து இந்த டெலிவரி நாட்கள் மாறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+