சென்னை: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு முதலே செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். தமிழ்நாட்டில் ஏற்கனவே முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. குடும்ப அட்டை அடிப்படையில் இந்த திட்ட பயனாளிகள் தீர்மானிக்கப்படுகின்றனர்.

ஒரு ரேசன் அட்டையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்பட்டு காப்பீடு வழங்கப்படும். அண்மையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்திய மத்திய அரசு, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வருமானங்களை கணக்கில் கொள்ளாமல் 70 வயதை தாண்டிய அனைவருமே இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்த குடும்பங்களில் 70 வயதை கடந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு தனி காப்பீடு கிடைக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே இந்த திட்டத்தில் இணையாத குடும்பங்களில் 70 வயதை கடந்தவர்கள் இருந்தால் அவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்ட இணையதளத்தில் இணைந்து காப்பீடு அட்டை பெறலாம்.
வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய ஆதார் கார்டு கட்டாயம். National Health Authority (NHA) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த https://beneficiary.nha.gov.in/ இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் பகுதியில் உங்கள் போன் நம்பர் கொடுத்தால் ஓடிபி வரும் அதனை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், senior citizens aged 70+ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் மாநிலம், மாவட்டம், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும் அதனை உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட போன் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும் அதனை கொண்டு KYC சரிபார்ப்பு நடைபெறும். பின்னர் உங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். 15 நிமிடங்களில் சரிபார்ப்பு நிறைவடைந்து கார்டு ஜெனரேட் ஆகிவிடும் அதனை பதிவிறக்கம் செய்யலாம்.
Ayushman App செயலியை டவுன்லோடு செய்தும் இதில் பயனாளியாக இணைய முடியும். உங்கள் மொபைலில் இதனை டவுன்லோடு லாகின் செய்ய வேண்டும். பின்னர் போன் நம்பர் கொடுத்தால் ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து ஆதார் தகவல்களை வழங்க வேண்டும். பின்னர் புகைப்படத்தை அப்லோட் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் KYC சரிபார்ப்பு முடிந்த உடன் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications